அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து இளம்விஞ்ஞானி A.J.சயித்"கழிவு நீரில் இருந்து மின்சாரம் கண்டுபிடிப்பு"....தனது திறமையை நிரூபிக்க ஜேர்மனி பயணம்-----

ஓன்றை உணர்ந்து கொண்டேன் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் செல்வாக்கும் பணபலமும் தேவை என்பதை.....
உங்கள் கரங்களில் எனது வெற்றி பயணம்,,,,,,,,,, 
 

தங்களைப்பற்றி-----

நான் எழுத்தூர் கிராமத்தில் எனது தந்தையார் அன்ரன் ஜிட்டேந்திரன் கணிதபாட ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் தாயார்A.J.துசியந்தி தம்பிமார்களான போல் பவித்திரன்-காலஞ்சென்ற)  மைக்கல் நிரோஷன் வசித்து வருகின்றோம். நானும் எனது தம்பியும் சித்திவிநாயகர் தேசிய கல்லூரியில் உயர்தரம் கற்று வருகின்றோம்.

தங்களுக்கு இவ்வாறான எண்ணம் எப்படி உருவானது----
நான் சிறுவயதில் இருந்தே சின்ன சின்ன கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்துள்ளேன. எனது இந்த முயற்சிக்கெல்லாம் காரணம் எனது தந்தை தான் எனது தரம் ஒன்றிலே மின்சுற்று செய்ய காட்டித்தந்தார் இப்படியாக தொடர்ந்தபோது தரம் 06இல் கற்கும் போது கிறிஸ்மஸ் நேரம் பட்டாசு என்றால் எனக்கு ரெம்ப பிடிக்கும் அப்பா பட்டாசு வாங்கித்தாருங்கள் என்று கேட்டேன் இந்தா இந்தக்கணக்கை செய்து முடித்தால் ஒருபெட்டி பட்டாஸ் வாங்கித்தருவேன் என்று சொன்னார் கொஞ்ச நேரத்தில் இரண்டு பாடகணக்கை முடித்துக்கொடுத்து பட்டாஸ் பெட்டியை வாங்கினேன். அதன் பின் அப்பா நான் என்ன கேட்டாலும் கல்வி தொடர்பான பாடங்களை செய்தால் வேண்டித்தருவேன் என்று சொல்வார் நானும் செய்துமுடிப்பேன் அப்பாவும் வாங்கித்தருவார் இப்படியாக நான் 11 வயதிலே சாதாரணதரம் பரீட்சை எழுதி ஆங்கிலத்தில்-A கணிதத்தில்-C பெற்றேன் தொடர்ந்து பல கண்டுபிடிப்புக்கள்.

பெற்றோரிடம் கேட்டபோது உங்களின் மகனின் செயற்பாடு----
இவன் சிறுவயதில் இருந்தே இப்படித்தான் ஒரு வயதாகும் போதே இவன் எதையாவது நோண்டிக்கொண்டிருப்பான் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வைப்பான் வளர வளர முன்பள்ளியில் கொண்டு போய் விட்டால் எல்லப்பிள்ளைகளும் விளையாடும் இவன் மட்டும் எதையாவது தேடிக்கொண்டும் வயர்கள் ஏனையபொருட்கள் எடுத்து உடைத்து பார்ப்பான் பாடசாலை நிர்வாகம் இவனது செயற்பாடுகள் சரியில்லை  கொழும்பில் தான் இவனது ஆரம்பக்கல்வி அங்கு சுத்தம் மற்றும் கல்விச்செயற்பாடுகள் அதிகம் பார்ப்பார்கள் இவன் செயற்பாடு அவர்களுக்கு உகந்ததாக இல்லை ஆசிரியர் ஒன்று சொன்னால் இவன் ஒன்று கேட்பான் வீதிகளில் கிடக்கின்ற பொருட்கள் எல்லாவற்றினையும் விட்டினுள் கொணர்ந்து குவிப்பான் அதில் இருக்கின்ற ஒவ்வொன்றையும் தகப்பனிடம் காட்டி விளக்கம் கேட்பான். இவரும் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்வார் எனக்கு கோபம் தான் வரும் அவனது படிப்பு குழம்பி விடும் என்று அன்று எமக்கு இவனுடைய செயற்பாடுகள் கோபமும் பயமமாகத்தான் இருந்தது இன்று அதுவே அவனதும் எங்களதும் அடையாளமாகவுள்ளது.

தங்களின் பாடசாலை செயற்பாடுகள் பற்றி---


  • At the age of 11 O/L Result English-A Maths-C Dec-2009
  • At the age  of 12 London Edexcel A/L
  • Maths-Core Mathematics 1-63/100
  •            Core Mathematics 2-76/100
  •            Core Mathematics 3-51/100
  •            Core Mathematics 4-25/100
  •            Mathematics 1-25/100
  •            Mathematics 2-19/100
  •            Physics         1 – 38/12
  • Intre School Competition (Jaffna Science Assocition)
  • Exhibition Inovation 1st Place 6th may -2016
  • Srilankan Inventors Commision Invention 1stplace Provincial-23-07-2016
  • All Island Energy Club Competition
  • Invention-Zonal-1st place 
  •               Provincial-1st place
  • Research - Zonal-1st place
                 Provincial-1st place 
                 National  2nd place
  • Short Film-   Zonal-1st place   Provincial-3rd place
  • English  Drama Competition
  • Senior Drama-2nd place Provincial-2014
  • Senior Drama-2nd place Zonal-2014
  • Senior Drama-1st  place Zonal-2013 
  • Solo Acting English Day-2nd plce 2013
  • Solo Acting English Day-1st  place-2014
  • St.Peter College School Language Day -2nd Actting-2008
  • St.Peter College School Language Day -3rd  Leciration-2008
  • St.Peter College School Language Day -2nd Speech -2006
  • St.Lawrence Church(Wellawatha)Sunday School 1st Attendance-2007
  • St.Lawrence Church(Wellawatha)Sunday School 1st Attendance-2006
  • St.Lawrence Church(Wellawatha)Sunday School 3rd Art Competition -2007
  • St.Lawrence Church(Wellawatha)Sunday School 3rd Singing compettion-2007
  • St.Lawrence Church(Wellawatha)Sunday School 1st Art Competition-2006




இதுவரை தங்களது கண்டுபிடிப்புக்கள் பற்றி-----
  • தரம்-02ம் -2005ஆண்டில்
கண்டுபிடிப்பு-உப்பு நீர் பெப்பமேற்றினால் கல்லாக மாறும் ஆனால் சீனியை வெப்பமேற்றினால் உருகி பாணியாக மாறும்
தீர்வு-சேர்வைகளின் உருகு நிலை வேறுபாடுகள்
  • தரம்-03 -2006ம் ஆண்டில்
கண்டுபிடிப்பு-கரிபிடித்த பாத்திரங்கள் விரைவில் சு10டாகாது
தீர்வு-காரணம் மூலகங்களின் வெப்பம் கடத்தாது
  • தரம்-04-2007 ஆண்டில்
கண்டுபிடிப்பு-மின்காந்தங்களை பிரயோகித்து தகவல் அனுப்பும் கருவி
  • தரம்-05-2008ஆண்டில்
பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் கருவி
கண்டுபிடிப்பு-பட்டாசுத்தூளுடன் செப்புத்தூளை கலந்து பச்சைநிறத்தில் வெடிக்கவைத்தல்
தீர்வு-சுவாலை பரிசோதனை விளைவு
பலவகைப்பட்டாசுகளை ஒன்றாக இணைத்து வானவெடியுடன் சேர்த்து வெடிக்க வைத்தல்
  • தரம்-06-2009ஆண்டில்
சாதாரணப்பரீட்சையில் தோற்றி ஆங்கிலத்தில்-A கணிதம் C
  • தரம்-10-2013ஆண்டில்
கண்டுபிடிப்பு-காற்றில் இயங்கும் துப்பாக்கி AIR GUN
மனிதன் போலவே நடக்கும் விளையாட்டு ரோபோவை கண்டுபிடித்தல்
மின்சார சக்தியில் இயங்கும் மிகவும் ஆபத்தான துப்பாக்கி
  • தரம்-11-2014ஆண்டில்
பேனையின் அளவில் மின்துப்பாக்கி வடிமைத்தல்
பச்சைகுத்தும் இயந்திரம் கண்டுபிடித்தமை 
ஆபத்தான மின்சாரத்தில் இயங்கும்
Tazer Glove கண்டுபிடித்தமை
  • தரம்-11 விடுமுறையில்
தாவரங்களில் இருந்து மின்சக்தியை தயாரிக்கலாம் என்பதை கண்டுபிடித்தமை
  • தரம்-12-2016ஆண்டில்
மீன் தொட்டி குளங்களின் சூழலலை பாதிக்காமல் அதனை சுத்திகரிக்கும் இயந்திரம்
ரேடியோ அலைகளில் இருந்து மின்சக்தியை உற்பத்தி செய்தல்
மின் இணைப்புககள் இன்றி வளங்களை பிரயோகிக்காமல் மின்சாரத்தை காற்றினுடாக கடத்தல்
மின்சக்தியை உடலுக்குள் ஏற்றுவதன் மூலம் பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தும் முறை
  • தரம்-13-2016-2017ஆண்டில்
சேதனச்சேர்வைகளை உக்கவைப்பதன் மூலம் பற்றிரியாவில் இருந்து மின்சாரம் தயாரித்தல்
கொழுப்பினால் ஏற்படும் பிரச்சினைகள் நோய்களுக்கான தீர்வு செயல் முறை போன்றவற்றோடு இன்னும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றேன.

தங்களின் புதிய கண்டுபிடிப்பிற்கான சிந்தைனையின் வெளிப்பாடு பற்றி----
நான் இயல்பாகவே தேடிக்கற்றுக்கொள்வேன் விரும்பி கற்றுக்கொள்வது விஞ்ஞானிகளினதும் வாழ்க்ககை குறிப்புக்கள் அவர்களது கண்டுபிப்புக்கள் ஆராச்சிகள் கட்டுரைகள் செயல்முறை விளக்கங்கள் ஆய்வு நூல்கள் அறிவியல் நூல்கள் போன்றவற்ரை படிப்பேன் அவற்றினை எனது பாடப்பரப்போடு இணைத்து ஆய்வு செய்வேன் சந்தேகங்கள் ஏட்படும் இணையத்தளங்களில் தேடுவேன் அப்படித்தேடிய போது ஒரு செய்தி படித்தேன் மது உற்பத்தி நிலையமொன்றில் COPPER CANE மின்சாரத்தாக்கம் ஏற்பட்டு ஒருவர் இறந்ததாக மின்கசிவு தான் காரணம் என தீர்வானது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனக்கு தெரிந்த அடிப்படை அறிவை வைத்துக்கொண்டு ஆய்வு செய்தேன்.

 சிறு விளக்கம்-----

Earth Battry    நிலத்தில் இருந்து மின்சாரம் எடுத்தல் அதாவது பூமியை பந்து போல் நினைத்துக்கொள்ளுங்கள் இரண்டு முகில் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது ஏற்படுகின்ற தாக்கத்தினால் உண்டாகும் இலத்திரன்கள் பூமிக்குள் சென்று பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் இதன் விரிவை
Earth science எனும் பாடப்பரப்பில் விரிவாக பார்க்கலாம் அத்தோடு எனக்கு மிகவும் பிடித்த விஞ்ஞானியான
NIKOLA TESLA பலகண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரணன சுவிஸ்லாந்தில் பிறந்து பல முறை பல கண்டுபிபபுக்களை கண்டபிடிக்க அதை ஒருவரும் ஏற்றுக்கொள்ள வில்லை  அவர்தான்
A-C DAINAMO-D-C போன்ற மின்சாரச்செயற்பாடுகளையும் நாம் பயண்படுத்துகின்ற மோட்hர்கள் வீட்டிக் மின்னினைப்பு செயற்பாட்டு சுற்று போன்றவற்றின் செயல்முறையினையும் படித்தேன்.
நிலமண்ணுக்குள் இருந்து இரண்டு மின்னெதிர் உலேகங்கள் செலுத்தினால் மின்சாரத்தினை பெறலாம் சிலிக்கன் டைன்ஸ் மண் ஈரப்பதன் இருந்தால் தான் மின்சாரம் வரும் அதன் படி நான் நிலத்தில் இருந்து மண்ணை பிரித்தெடுத்த தனியாக கோப்பையில் வைத்து பரிசோதனை செய்த போதும் மின்சாரம் வருவதை கண்டுபிடித்தேன். மின்னெதிர் இயல்பு இலத்திரன்கள் தனிப்பட்ட மூலகத்தின் தன்னகத்தே கவரும் ஆற்றல் மின்சாரம் என்பது வரைவிலக்கணமாகும்.
அத்தோடு எங்களது பாடசாலை ஆசிரியர் தர்சினி உயிரியல் MSD முடித்து தற்போது PHD செய்து கொண்டு இருக்கிறார். அவரின் ஆய்வு செயற்பாட்டிற்கு TYPE பண்ணிக்கொடுக்கும் போது அவர் பக்ரீயா பற்றிய அய்வு செய்கின்றார் றைசோபியம் பக்ரீயா பற்றிய அவர இனத்தாவரங்களின் வேர்களில் ஏற்படுகின்ற அமோனியமமானது வளிமண்டலத்தில நைட்ரேஜன் சேர்ந்து இறங்குவதன் மூலம் பசளைத்தாக்கம் ஏற்படுத்தலாம் என்னும் ஆய்வை வாசிக்கும் போதும் எனக்குள் ஏற்பட்ட கேள்விகளுக்கான விடைதான் நான் புதிதாக கண்டபிடித்திருக்கும் இந்த கண்டுபிடிப்பு.

இந்தக்கண்டபிடிப்புக்களை உடனே ஏற்றுக்கொண்டார்களா…
முதலில் நான் எனது கண்டுபிடிப்பினை இலங்கை கண்டுபிடிப்பாளர் சங்கத்திடம் தான் முன்வைத்தேன்  அவர்கள் முழுமையாக கேட்டுவிட்டு பாராட்டினார்களே தவிர ஏற்றுக்கொள்ளவில்லை மாகாணமட்டத்திலும் தேசிய அளவிலும் பரிசு கூட கிடைக்கவில்லை விளக்கம் கேட்டேன். செயல்முறை வேண்டும் என்றார்கள்  சரி இவ்விடையம் தொடர்பாக எனது ஆசிரியர்களிடம் ஆலோசனை செய்தேன.எனக்கு எருக்கலம்பிட்டி பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூடத்தினை பயன்னடுத்த அனுமதி கிடைத்தது. அங்குதான் எனக்கு தேவையான உபகரணங்கள் இருந்தது அதைப்பயன்படுத்தி செயல்முறையினையும் தாக்கசமன்பாட்டினையும் எழுதிக்கொடுத்த விளங்கப்படுத்தினேன்
அவர்கள் எனக்கு ஒரு சமன்பாட்டை விளங்கப்படுத்தினார்கள் அந்த சமன்பாடு இயல்பான அயன் ரான் சமன்பாடுதான் நான் எழுதிக்கொடுத்த சமன்பாடு வேறுதான் இரண்டு கோட்பாடுகளும் வேறாக இருந்தாலும் சந்திக்கும் புள்ளி மின்சாரம் கிடைக்கின்றது அப்படியானவுடன் தான் ஏற்றுக்கொண்டார்கள்.

அப்படியானால் உடனே தெரிவு செய்து விட்டார்களா…
இல்லை இலங்கை பூராகவும் இருந்து சுமார் 100ற்கும் அதிகமான இளம் விஞ்ஞானிகள் தமது கண்டுபிடிப்புக்களை சமர்பித்தார்கள் அவர்களில் இருந்து முதல் கட்டமாக 40பேர் தெரிவு 2ம் கட்டமாக 16 பேர் தெரிவு 3ம் கட்டமாக 8பேர் தெரிவு 4ம் கட்டமாக 5பேர் தெரிவு கடைசியாக 02 பேர் தெரிவு இப்படியாக 06தெரிவுகளில் நான் எனது கண்டுபிடிப்பினை எடுத்துவந்தேன் தொடர்ச்சியான பல கேள்விகள் தடைகள் பிரச்சினைகள் கடைசியாக வந்தவர்களில் நான் மட்டும்தான் தமிழ் சர்வதேசத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் என்று பெயரினை போடாமல் வெறும் இலக்கங்களை மட்டும் 1 -2 எனகுறிப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் கடைசியாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விளக்கம் அளித்தேன் அந்தக்கணமே திரையில் எனது பெயர் பிரசுரமானது.

நீங்கள் மட்டும்தான தெரிவு செய்யப்பட்டடீர்கள்------
நானும் சகோதரமொழி மாணவனும்
  • எனது கண்டுபிடிப்பு கழிவு நீரில் இருந்து மின்சாரம் உருவாக்குதல் அத்தோடு நீரினையும் சுத்தம் செய்தல்)
  • அவரது கண்டுபிடிப்பு-மகரந்தங்களை சுவாசிக்கும் போது ஏற்படுகின்ற நோய்கள் தொடர்பானவை
என்னை தட்டுவதற்காக கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது காரணம் அந்த இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட 05 இளம் விஞ்ஞானிகளில் நான் மட்டும் தான் சாதாரணமான மாணவன் எல்லா விடையத்திலும் அவர்களின் தாய்தந்தையர் மருத்துவர்களாக விஞ்ஞானிகளாக பெரும் செல்வாக்குள்ளவர்களாகவும் அதே வேளை அவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களும் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்பவர்கள் பெரும்புள்ளிகள் இவ்வாறு ஒவ்வொரு இளம்விஞ்ஞானியினதும் படைப்பு திரையில் வரும் போது தாய்தந்தை பெயர் அவர்களுது ஆலோசனையாளர்கள் சிபாரிசு செய்பவர் தகமைகளோடு போடுவார்கள் அதைப்பார்க்கின்றபோதே நடுவர்கள் பிரமித்துப்போய் விடுவார்கள் பிறகு எவ்வாறு திறமையான படைப்பை பார்க்க இயலும் இவ்வாறான சந்தர்ப்பத்திலும் எனது கண்டுபிடிப்பானது தேர்வுசெய்யப்பட்டுள்ளது என்றால் எனது திறமையின் வெளிப்பாடும் எனது கண்டுபிடிப்பானது தற்போதைய சூழலில் மக்களுக்கு பிரியோசனமானதும் ஆகும்.
ஓன்றை உணர்ந்து கொண்டேன் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் செல்வாக்கும் பணபலமும் தேவை என்பதை.

தங்களின் எதிர்காலத்திட்டம் பற்றி—
எனது சமுதாயத்தின் நலனுக்காகவும் எனது நாட்டிற்காககவும் எனது கண்டுபிடிப்புக்களை சமர்ப்பிப்பேன் இது எனது நாடு என்னைவளர்த்து உருவாக்கிய நாட்டிற்கு எனது அறிவுத்திறத்தினையும் சேவையினையும் வழங்குவேன. என்னைப்போல திறமையானவர்கள் பலர் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஆண்டும் புலமைப்பரிசில் மூலம் 10 பேர்வெளிநாடு செல்கின்றார்கள் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில்லை அவர்கள் அதற்கு இலங்கை என்க்கு என்ன செய்தது என்னை யார் கவனித்தார்கள் என்றும் அதிக பணம் சொகுசான வாழ்க்கைக்காக தாய்நாட்டை வெறுக்கின்றார்கள்.

 இவ்வாறு எல்லோரும் செல்வதால் தான் சாதாரணமாக பெறக்கூடிய பக்ரீயாவை இவ்வளவு பணம் கொடுத்து பெறவேண்டியுள்ளது. அத்தோடு திறமையான பல மாணவர்கள் கல்விமான்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் தான் இனனும் எமது நாடு G-8 வரவில்லை எனது ஒட்டுமொத்த கண்டுபிடிப்பினையும் எனது நாட்டினது நலனுக்காகவும் வளர்ச்சி எழுச்சிக்காகவும் பயன்படுத்துவேன் இலட்சியமும் அதுதான்.

தங்களின் இந்த வெற்றிக்கு துணையானவர்கள் எனும் போது---
எனது வெற்றிக்கு முதலில் எனது பெற்றோருக்கும் அத்தோடு எனது ஆசிரியர்கள் அதிபர் அவர்களுடன் கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களையும் திரு.சிவன்அருள்ராஜ் திருமதி சாரதா அஞ்சலி  மனோகரன் இவர்களுடன் எனது ஆலோசனை விஞ்ஞானிகளான DR.காமினி பியதஸ DR.சமீர சமரக்கோன் இன்னும் எனது வெற்றிப்பயணத்தில் உதவி புரியவிருக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் நன்றியுடன.
 
சர்வதேச இளம்விஞ்ஞானிகள் மாநாட்டிற்கு செல்வதாற்கான நிதி பற்றி---

எனது கண்டுபிடிப்பினை செயல்முறைவிளக்கத்தோடு தெளிவு படுத்தவும் பணயத்திற்குமான செலவு சுமார் 5இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.
அதேவேளை எனது ஆய்வுக்கான முக்கியபொருளான பற்றீரியாவினை கொள்வனவு செய்வதற்காகமட்டும் சுமார் 2இலட்சம் தேவை அதுமட்டுமல்ல பற்றீரியா கொள்வனவு செய்வதற்கு அரசஅங்கீகார அனுமதி தேவை அந்த அனுமதியினையும் பற்றிரீயா கொள்வனவுக்கு தேவையான 200000ரூபாவினையும் மாண்புமிகு அமைச்சர் றிஷாட்பதியுதீன் அவர்கள் தருவதாக வாக்களித்துள்ளார். அவருக்கு மிகவும் நன்றியுணர்வுடன் அத்தோடு தந்தை 100000 இலட்சம் ரூபாவினை தருகின்றார். எனக்கு தேவையான மீதி 200000 ரூபாவினை எப்படிபெற்றுக்கொள்வது என்று தெரியாமல் உள்ளது.

 முடியுமானவரை உறவுகளே எனது கண்டுபிடிப்பினை சர்வதேச அளவில் வெற்றி பெறச்செய்வது உங்களின் கைகளில் தான் உள்ளது சர்வதேச மாநாட்டுக்கு நான் சென்று எனது கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் அதன் செயல்திறன் பற்றி தெளிவுபடுத்தி சர்வதேச அளவில் சாதனை நிலைநாட்டுவேன் தமிழனாக எனவே எனக்கு தேவையான நிதிப்பங்களிப்பினை செய்ய முன்வரும் நல்ல உள்ளங்கள் இணைந்து கொள்ளுங்கள்…
அன்புடன்
A.J.சயித்
மன்னார் மண்ணின் இளம்விஞ்ஞானி
(இலங்கையில் இருந்து சர்வதேசம் செல்லும் ஒரே தமிழ் மாணவன்)

மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களும் எமது இளம் விஞ்ஞானியை பாராட்டியுள்ளனர்….

எனது கண்டுபிடிப்பின் பெயர்----

MODIFICATION OF MICROBIAL  FUEL CELLS IN WAST WATER TREATMENT VIA  THE TRANSFORMATION OF THE  FACULTATIVE ANEROBE  Shewanella Putrefaciens-நுண்ணுயிர் எரிபொருட்கலம்  

இளம் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பின் முழுமையான விரிவாக்கம் இதோ.......... 
மன்னார் சித்திவிநாயகர் இந்துதேசியகல்லுரியில் கணிதப்பிரிவில் பயிலும் மாணவன் செல்வன் A.Jசயித்
சேதனச்சேர்வைகளை உக்கவைப்பதன் மூலம் உருவாகும் பச்சைவீட்டு வாயுக்களை தடுத்து அதற்கு பதிலாக மின்சாரத்தை உற்பத்தி செய்தல்
இன்று நாம் மின்சாராத்தினை உற்பத்தி செய்வதில் 30தசாப்த காலங்களை கடந்து வந்துள்ளோம் இக்காலப்பகுதியில் நாம் பாவனையில் ஏற்றுக்கொண்ட சக்தி வளங்களாக சூரியபடல்-காற்றலைகள் நீர்நிலைகள் போன்ற திறன் மிக்க சக்தி வளங்கள் காணப்படுகின்ற போதிலும் இந்த இளம் மாணவன் இவற்றிற்கு நிகரான மற்றும் இவற்றை விட திறன் மிக்க ஒரு சக்தி வளத்தை கண்டு பிடித்துள்ளான் இதை இவர் இருவருட கடும் ஆய்வுகளின் மூலம் பல இன்னல்களையும் தாண்டி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
இதற்கு காரணமாக அவர் தனது பரிசோதனையில் பெற்ற சிறு சிறு பெறுபேறுகளைக்கூட புறக்கணிக்காமல் அதை இன்னும் விரிவாக ஆராய்ந்து கடும் முயற்சி செய்தமையினாலே சாதிக்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
நுண்ணங்கிகளின் தொழிற்பாடு ஒன்றை மாற்றி அதன் DNA மூலக்கூறை மாற்றி வடிவமைத்தல் மூலம் அதனை மின்சக்தி உற்பத்தி செய்ய வைக்கலாம் என்பதே இவரது ஆய்வாகும்.

 ஆனால் மண்ணில் இயற்கையாகவே மின்சாரத்தை தயாரிக்கும் நுண்ணங்கிகள் உள்ள போதும் அவை 10000-1எனும் மிககுறைந்த சதவீதங்களிலேயே காணப்படும் இதற்கான காரணம் இந்த நுண்ணங்கிகள் இனப்பெருக்குவதற்கான சூழ்நிலையை பிற நுண்ணங்கிகள் தடுப்பதினாலேயே ஆகும் இவரின் ஆய்வில் மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் நுண்ணங்கிகளை பிற நுண்ணங்கிகளை எதிர்த்து போராடும் நோயெதிர்ப்பு சக்தி போன்ற ஒரு DNA மூலக்கூறு வகையை அந்த நுண்ணங்கிகளுக்குள் செலுத்தி அதன் அளவை அதிகரிக்க வைத்துள்ளார்.

இந்த ஆய்விற்கான நடைமுறைப்பிரயோகமாக கழிவுநீர் சுத்திகரிப்பை தேர்ந்தெடுத்துள்ளார் கழிவுநீர் சுத்திகரிப்பானது பெரியளவில் செய்யும் போது அதில் ஏராளமான சேதனச்சேர்வைகள் காணப்படும் இந்த சேதனச்சேர்வைகளான உக்கவைக்கப்பட்டு இறுதியில் பசளையாக பயன்படுகின்றன ஆனால் அதன் விளைவாக பச்சைவீட்டு வாயுக்களான
CO2-CH4-(மேதேன்)நச்சுவாயுக்கள் உருவாகின்றன இவரது ஆய்வின் நடைமுறை பிரயோகமாக கழிவுநீர் சுத்திகரிப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.
கழிவு நீரில் உள்ள சேதன சேர்வைகளை இவர் குறிப்பிட்ட நுண்ணங்கியால் உக்கவைத்து அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து அதே நேரத்தில் கழிவு நீர் சுத்தி கரிக்கும் நேரத்தை குறைத்து கழிவு நீரில் காணப்படும் பல உலோக நுண்துணிக்கைகளை
(HEAVY METAL NANO PARTICLES)இல்லாமல் செய்வதுடன் பிறபொருள் எதிரிகளை இல்லாமல் செய்ய வைத்துள்ளார். ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து காணப்படும் சேதனச்சேர்வைகளில் இருந்து இவர் தயாரிக்கும் மின்சாரமானது நீர் சுத்திகரிப்பிற்கு தேவைப்படும் முழு மின்சாரத்தையும் வழங்குவதுடன் மேலதிகமாக 800 நவீன விடுகள்
(60WH-1)வீதம் மின்சக்தியை வழங்க முடியும்.
இந்த செயன்முறையால் ஒருசுத்திகரிப்பு நிலையத்தை சுற்றியுள்ள 20.000 குடும்பங்கள் நன்மை பெறமுடியும் என இவர் குறிப்பிடுகின்றார்.
இந்த அய்வினை வரும் சித்திரை 16ம் திகதி ஜேர்மனியில் நடக்கும் சர்வதேச இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில்
INTERNATIONAL CONFERENCE OF YOUNG SCIENTISTS-ICYS-2017(16-04-2017)

தனது ஆய்வை முன்வைக்கவுள்ளார் இந்த ஆராச்சி நடைமுறைப்படத்தப்பட்டால் மின்சாரம் தயாரிப்பதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம் எனக்குறிப்பிடுகின்றார்
இவரின் முயற்சி வெற்றியடையவும் தொடர்ந்து இன்னும் பல கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிக்கவும் வாழ்த்துவதோடு பாடசாலைச்சமூகம் அதிபர் ஆசிரியர்கள் இளம் விஞ்ஞானியின் பெற்றோரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

சின்ன வயசு சிகரத்தை நோக்கி நகரும் கண்டுபிடிப்புக்கள் தொடர வாழ்த்துகின்றோம்.

சந்திப்பு- வை-கஜேந்திரன்-
     
மேலதிக தகவல்களுக்கும் உதவிவழங்களுக்கும்
தொடர்புகளுக்கு

A.J.சயித்
0763473027
0232251627
        
       


















மன்னாரில் இருந்து இளம்விஞ்ஞானி A.J.சயித்"கழிவு நீரில் இருந்து மின்சாரம் கண்டுபிடிப்பு"....தனது திறமையை நிரூபிக்க ஜேர்மனி பயணம்----- Reviewed by Author on February 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.