அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அரசபேரூந்து போக்குவரத்துச்சாலை அதிகாரிகள் கவனத்திற்கு......

மன்னார் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து சாலையில் உள்ள அரசபேருந்துகள் பலவற்றின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாக மக்கள் கவலை. தூரப்பயணங்கள் செல்லும் பேரூந்துகளைவிட ஏனைய உள்ளுர் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேரூந்துகளின் நிலமைதான் கவலைக்கிடமாவுள்ளது.

அதிலும் குறிப்பாக கிராமப்பபுறங்களில் சேவையில் உள்ள பேரூந்துகள் சொல்லவே தேவையில்லை அந்தளவுக்கு இருக்கின்றது நிலைமை…
  • இருக்கைகள் கிழிந்தும் ஆடிக்கொண்டும்
  • பிடித்துக்கொண்டு நிற்கும் கம்பங்கள்(கம்பிகளும்)
  • இரண்டு பக்ககண்ணாடிகள் உதறல் சத்தம் காதைப்பிளக்கும்.
இவற்றையும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால் பேரூந்தின் ரயர்கள் இயற்திரங்களின் தரமும் அதன் செயல்திறனும்
கிளச் பிறேக் பிடிபடாமலும் முக்கியமான விடையங்கள் வயரினாலும் துணியினாலும் கட்டியும் சுற்றியும் இருக்கின்றது.


எமது மாவட்டத்தின் உள்ள வீதிகளின் நிலமையில் நாம் பயணிக்கும் பேரூந்துகளின் நிலமைக்கு ஏற்றவாறு இருப்பதால் மிகவும் பயந்த நிலையிலேயே பயணம் செய்கின்றோம்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு உதாரணமாக  மன்னாரில் இருந்து  வங்காலை நானாட்டான் உயிலங்குளம் செல்லும் பேரூந்து  இலக்கம் NA-3630 நிலைமையும் மேற்சொன்னபடியே…

மக்களின் பணத்தினைமட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றாமல் மக்களினதும் சாரதிகளினதும் உயிர்களையும் அவர்களின் பாதுகாப்பான பயணத்தினையும் உறுதிசெய்யும் பொருட்டு நல்ல தரமான பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துங்கள்.

 இல்லையெனில் நல்லமுறையில் திருத்தவேலைப்பாடுகள் செய்து அதன் பின்பாவது சேவையில் ஈடுபடுத்துங்கள் என்பதை கவலையுடன் தெரியப்படுத்துகின்றோம்
  • பேரூந்துகள் ஒன்றுக்கொன்று முந்திச்செல்லுதல்
  • குறித்த இடத்தில் இறக்கி விடாமல் செல்லுதலும் ஏற்றாமல் செல்லுதலும்.
  • வேகமான ஓட்டம்
  •  மீதிப்பணம் தருவதில்லை (சிலர் மட்டும்)
  •  பேரூந்துகளில் பல கோளாறுகள் இருப்பதால் உரிய நேரத்துக்கு செல்லமுடியாமல் உள்ளது.

இவ்வாறு பேரூந்துகள் மோசமான நிலையில் இருப்பதற்கு யார் காரணம்…
  • பேரூந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களா…
  • இ.போ.சா மன்னார் சாலை நிர்வாகமா...........
  • பொறுப்பான அதிகாரிகளின் கவனயீனமா....
  • போதுமான நிதி ஒதுக்கப்படவில்லையா…
பிரச்சினை எதுவாக இருப்பினும் தீர்வு மக்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு மன்னார் சாலை இ.போ.சவின் அதிகாரிகளுக்கு உரியதே இவ்வாறான தரமற்ற பேரூந்துப்பயணத்தினால் விபத்துக்கள் பாதிப்புக்கள் உயிர்ப்பலிகள் ஏற்பட வாய்புண்டு ஆகவே சிந்தியுங்கள் செயலாற்றுங்கள்….

குறிப்பு-
கடந்த தினங்களுக்கு முன்பு ஹப்புத்தலை பெரகல விஹரகல வீதியில் நடந்த சம்பவம் பிறேக் பிடிக்காமல்  10000 அடிப்பள்ளத்தில் விழவிருந்த பேரூந்தை H.M.கீர்த்தி பண்டார என்பவர் தனது உயிரைக்கொடுத்து பயணிகளை காப்பாற்றியுள்ளார். இது ஒரு செய்தி மட்டுமல்ல பல உயிரைக்காத்த ஒருவரின் இறுதி நிமிடங்கள் இவ்வாறான சந்தர்ப்பம் இலங்கையில் நடப்பது இரண்டாம் தடவையாம் சொல்லுகின்றார்கள் இன்னும் எத்தனையோ நடக்க இருக்கின்றது.
 யார் தடுக்கப்போகின்றோம்...... நிறுத்தப்போகின்றோம்….
மக்களுக்கான தரமான சேவைதான் தேவை


-மன்னார்விழி-





மன்னார் அரசபேரூந்து போக்குவரத்துச்சாலை அதிகாரிகள் கவனத்திற்கு...... Reviewed by Author on October 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.