680 கோடிக்கு செருப்பு....தங்கத்தால் செய்யப்பட்ட ஹேண்ட்பேக்குகள் : சொகுசு வாழ்க்கை -
எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது.
அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
நாட்டின் வளர்ச்சி நிதியத்தில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளே தனது முன்னாள் கூட்டாளியான மஹதீர் முகமதிடம் நஜிப் தோல்வியுற்றதுக்கு முக்கிய காரணமாகும்.
நஜிப்பால் அமைக்கப்பட்ட அந்த நிதியத்துக்காக வந்த பல பில்லியன் டொலர்கள் கணக்கில் வரவில்லை.
700மில்லியன் டொலர்களை நஜிப் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது ஆனால் அதை நஜிப் மறுத்து வருகிறார்.
கடந்த வாரம், அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் பொலிசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பண கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.
72 சூட்கேஸ்களில் இருந்த இந்தக் குவியலை பொலிசார் பறிமுதல் செய்தனர். லண்டன், ஹவாய், நியூயோர்க், ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ள புகழ்பெற்ற நகைக்கடைகளில் இவை வாங்கப்பட்டிருந்தன.
இந்த நகைகளின் மதிப்பு சுமார் 40 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஆகும். இவை அனைத்தும் நஜீப்பின் மனைவி ரோஸ்மா வாழ்ந்த சொகுசு வாழ்க்கைக்கான ஆதாரம்.
2008 முதல் 2015 ஆம் ஆண்டுவரை இவர் அலங்காரப் பொருட்களுக்கு மட்டும் 54 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார். 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட முதுமையை தடுக்கும் மாத்திரைகளை வாங்கியிருக்கிறார்.
உருக்குப் பெண்மணி என்று கூறிக்கொள்ளும் இவர், 680 கோடி ரூபாய்க்கு ஆடம்பர செருப்புகளையும், உடைகளையும் வாங்கியிருக்கிறார்.
விலையுயர்ந்த ஆடம்பரமான முதலைத் தோலில் வைரம், தங்கம் கலந்து செய்யப்பட்ட 274 ஹேண்ட்பேக்குகள் கைப்பற்றப்பட்டன. இவை 10 லட்சம் ரூபாய் முதல் 81 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ளவை.
எனது பாடல்கள் அடங்கிய ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டேன். அதில் கிடைத்த வருமானத்தில்தான் எனக்குத் தேவையான நகைகளையும் உடைகளையும் வாங்கினேன் என ரோஸ்மா விளக்கம் அளித்துள்ளார்.
680 கோடிக்கு செருப்பு....தங்கத்தால் செய்யப்பட்ட ஹேண்ட்பேக்குகள் : சொகுசு வாழ்க்கை -
Reviewed by Author
on
May 31, 2018
Rating:
No comments:
Post a Comment