1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை மீட்பு -
சோழ வம்சத்தை சேர்ந்த புகழ்பெற்ற மன்னரான ராஜராஜ சோழன், இந்தியாவின் பல பகுதிகளை ஆண்டதாக வரலாற்றில் கூறப்படுகிறது.
அவர் குமரி முதல் இமயம் வரை உள்ள பல பகுதிகளில் போர் தொடுத்துள்ளார். அப்போது அவர் பிடித்த பகுதிகளில் சிலைகள் நிறுவப்பட்டன. அந்த சிலைகளை தமிழக தொல்லியல் துறையினர் மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜராஜ சோழனின் சிலை, அவரது பட்டத்து அரசியான உலோகா மகாதேவியின் ஐம்பொன் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது.
இந்த சிலைகள் குஜராத் மாநிலத்தில் அருங்காட்சியகத்தில் இருப்பதாக தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த சிலையை தேடி தமிழக காவல்துறையின் IG பொன்மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை சென்றது.
தற்போது அந்த சிலையுடன், உலோகா மகாதேவி சிலையையும் பொலிசார் மீட்டு வந்துள்ளனர். அவற்றில் ராஜராஜ சோழன் சிலையின் மதிப்பு ரூ.100 மற்றும் உலோகா மகாதேவி சிலையின் மதிப்பு ரூ.50 கோடி என்று பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சிலைகளுடன், சிலை கடத்த தடுப்புப் பிரிவு காவலர்கள் ரயில் மூலமாக நாளை சென்னைக்கு கொண்டு வர உள்ளனர்.
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை மீட்பு -
Reviewed by Author
on
May 31, 2018
Rating:
No comments:
Post a Comment