அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் 400 கோடி ரூபாய் செலவில் பேசாலை மீன்பிடித்துறைமுகம் சம்பந்தமான விளக்கம்.....பொறியியலாளர் சம்மேளனம் இலங்கை

மன்னாரில் தற்போது பாரிய அபிவிருத்திகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது
நடைபெறவிருக்கின்றது மகிழ்ச்சியான விடையம்தான் ஆனாலும் எந்த அபிவிருத்திப்பணிகளும் முழுமையாக பூர்த்திசெய்யப்பட்டு மக்களின் நீண்ட கால பாவனைக்கு உகந்ததாக இருக்கின்றதா என்றால் இல்லைதான்....இனியும் நடக்கும் என்றாலும் அதுவும் சந்தேகம் தான்.....
காரணம் சிலரின் சுயலாபநோக்காலும் அரசியல் செல்வாக்காலும் தடைப்படுகின்றது இல்லாமல் போகின்றது...அவ்வாறானதொரு குழப்பநிலையில் இருக்கும் அபிவிருத்தி தான்....பேசாலை மீன்பிடித்துறை முகம. 
 தமிழ் மக்களின் இழப்புக்கள் இறப்புக்கள் கணக்கில் அடங்காதவை எஞ்சி இருப்பதையும் அபிவிருத்தி என்ற போர்வையில் இழப்பதற்கு தயாராக இல்லை என்ற எண்ணப்பாட்டில் தான் தற்போது மக்கள் உள்ளனர் இருப்பதே போதும் இப்படியே இருந்துவிடுகின்றோம் விட்டு விடுங்கள் என்கின்றனர் மக்கள்....
  • எமது வளங்கள் பறிபோகும்
  • எமது கட்டமைப்பும் கலாச்சாரமும் அழியும்
  • எமது தொழில்பாதிக்கப்படும் 
  • அடுத்த தலைமுறை......????
எமது பொறுப்பில் எமது கட்டுப்பாட்டில் எம்மால் சுகந்திரமாக செயல்படமுடியும் என உறுதியளித்து அதன் படியே செயலாற்ற சட்டங்கள் இருக்கும் என்றால்  அபிவிருத்தி  என்பது மகிழ்ச்சி தான்

 தூரநோக்கு சிந்தனையில் தான் நாம் எதையும் முடிவெடுக்க வேண்டும்
வேண்டாம் என்று சொல்வது இலகு 

பொறுமையாக சிந்திப்போம்.....விரைவாக செயல்படுவோம்....

01. பேசாலை மீன்பிடி துறைமுகத்திட்டம் என்றால் என்ன?
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிய அபிவிருத்தி வங்கி
வட மாகாண நிலை பேறான மீன்பிடி அபிவிருத்தித்திட்டம் ஒன்றை அமுல்
படுத்த முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலங்கை மீன்பிடித்திணைக்களம்
வடக்கில் அமைக்கவுள்ள நான்கு மீன்பிடித்துறைமுகங்களில் இரண்டிற்கான
நிதியை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்கீழ் அண்ணளவாக 1100 கோடி ரூபாய் செலவில் பருத்தித்துறை
மீன்பிடித்துறைமுகத்தையும் 400 கோடி ரூபாய் செலவில் பேசாலை மீன்பிடி
துறைமுகத்தையும் அமைத்து மக்களின் பாவனைக்கு வழங்குதலும்
இலங்கையில் தற்போது காணப்படும் ஏனைய 21 துறைமுகங்களைப்போன்று
இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தினூடு இவ்விரு
துறைமுகங்களையும் பராமரித்தலுமே இத்திட்டமாகும்

02. இத்திட்டம் உருவானதன் பின்னணி என்ன?
1983 ம் வருட தரவுகளின் படி வடக்கு மாகாணமானது இலங்கையில்
வினைத்திறன் மிக்க மீன்பிடி பிராந்தியமாக இருந்தது. தேசிய மொத்த
மீன்பிடியில் 40% பங்களிப்பை வடமாகாணம் செய்தது.
ஆனால் 2015 இல் வடமாகாணத்தின் பங்களிப்பு தேசிய மொத்த மீன்பிடியில்
வெறும் 16%ஆக குறைவடைந்துள்ளது.
வடமாகாண மீனவர்கள் இன்னும் கரையோர மீன்பிடியில் மட்டுமே
ஈடுபடுவதும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடாமல் இருப்பதுமே இதற்கான
பிரதான காரணங்கள்
இலங்கையின் மற்ற பகுதிகளில் மொத்தம் 21 மீன்பிடி துறைமுகங்கள் இருக்கும் அதேவேளை வடக்கில் ஒரு மீன்பிடி துறைமுகம் கூட இல்லாமை துரதிஷ்ட வசமானதே. மீன்பிடி துறைமுகங்கள் இருந்தால் மட்டுமே வடமாகாண மீனவர்களும் அவர்களின் பெரிய படகுகளை (ஒரு நாள் மற்றும் பலநாள்
படகுகள்) பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும்  அங்கிருந்து ஆழ்கடல்
மீன்பிடியில் ஈடுபடவும் முடியும். இவற்றை கருத்தில் கொண்டுதான் வடக்கில் அரசு அமைக்க இருந்த நான்கு மீன்பிடி துறைமுகங்களில் இரண்டிற்கான நிதியை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துக்கொண்டது.

03. 150 கோடியாக இருந்த இந்த திட்டத்தின் மதிப்பு 400 கோடியாக
அதிகரித்ததன் பின்னணி என்ன?
பொதுவாக அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது ஆரம்ப
கட்ட மதிப்பீடுகள் அண்ணளவாக முடிவு செய்யப்படும். எனினும் திட்டம்
சார்ந்த கட்டமைப்புகள் முழு வடிவம் பெறும்போதே அத்திட்டத்தின்
உண்மையான மதிப்பீடு தெரியவரும். அத்துடன் உலகப் பொருளாதாரத்தின்
பண மதிப்புக்கு ஏற்ப இலங்கை ரூபாயின் வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணமாகும்.
இதேபோலதான் இத்துறைமுக திட்டங்களில் ஆரம்பத்தில் பருத்தித்துறை
துறைமுகத்திற்கு 600 கோடியும் பேசாலை திட்டத்திற்கு 150 கோடியும்
ஒதுக்கப்பட்ட நிதி பின்னர் பருத்தித்துறைக்கு 1100 கோடியாகவும் பேசாலை
துறைமுகத்திற்கு 400 கோடி ரூபாவாகவும் அதிகரித்தது.

04. இதற்காக பேசாலை தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணம்?
ஏனைய நிதிவழங்கும் நிறுவனங்களை போலன்றி ஆசிய அபிவிருத்தி
வங்கியானது தான் வழங்கும் நிதி சரியான இடத்தில் சரியான
தேவைக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறதா.... அதிகமான மக்கள் இதன் மூலம்பயன் பெறுகிறார்களா.. என்பவற்றை சரியான முறையில் ஆராய்ந்தே
நிதிவழங்கும். இதன் அடிப்படையில் பருத்தித்துறை துறைமுகம் தெரிவான
பின்னர் அடுத்த துறைமுகத்திற்காக முல்லைத்தீவு சிலாவத்துறை மற்றும்
பேசலை ஆகிய இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு கீழ் வரும் காரணங்களுக்காக
பேசாலை தெரிவு செய்யப்பட்டது.
1. மன்னார் மாவட்டத்தில் அதிக சனத்தொகையை கொண்ட கிராமம்.
2. அதிக மீனவர்களை கொண்ட கிராமம்.
3. மன்னாரின் மீன்பிடியில் பெரியளவு செல்வாக்கு செலுத்தும் கிராமம்.
4. மன்னாரில் 200 இற்கும் மேற்பட்ட ஒருநாள்{ இழுவை படகுகளை கொண்ட
கிராமம்.
5. துரதிஷ்ட வசமாக அப்படகுகளை நிறுத்தி வைக்கும் முறையான வசதிகள்
இன்மையால் வருடாந்தம் பல படகுகளை கடலுக்கு காவுகொடுக்கும் ஒரே
கிராமமும் கூட.

எமது சமுதாயத்தின் கேள்விகளும் அதற்கான பதில்களும்

1. மீன் கணவாய் நண்டு மற்றும் இறால் என்பன வளரக்கூடிய வாழ்விடங்களான
கண்டமேடை பவளப்பாறை என்பன பாதிக்கப்படலாம்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி மீன்பிடித் துறைமுகம்
நிர்மாணிக்கப்பட இருக்கின்ற இடத்தில் எந்தவொரு மீன் இனப்பெருக்கச்
செயற்பாடுகளும் நடைபெறுவதில்லை. இது சம்பந்தமான ஆய்வறிக்கையினை
நாம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் துறைமுகம் அமைக்கப்படும் இடத்தினுள் மட்டுமே மண்
அகலப்படும். மண்ணகழ்வு 10 அடி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும்.
இதனால் எந்தவொரு மீன் இனப்பெருக்கச் செயற்பாடுகளும்
பாதிக்கப்படமாட்டாது.

2. சிறு மீன்பிடித் தொழில்கள் (உதாரணம் - தெப்பம்) பாதிக்கப்படலாம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரனையுடன் நடைபெறும் எந்தவொரு
அபிவிருத்திச் செயற்பாடுகளினாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடுகள்
வழங்கப்படும். அடுத்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நடைபெறவிருக்கும்
கலந்துரையாடலில் இது பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டு உரிய
நடவடிக்கைகளை எம்மால் மேற்கொள்ளமுடியும்.
இத்திட்டத்தின் கீழ் சிறுதொழிலுக்கான தொழில் பயிற்சிக்கூடமும் அமைக்க
பட இருப்பதால் இத்துறைமுகம் அமைப்பதால் தொழிலை இழப்போர் என
மீன்பிடி திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்படும் மீனவர்களுக்கு (தெப்ப)
இப்பயிற்சிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு நண்டு வளர்ப்பு போன்ற மாற்று
தொழிலுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும்.

3. கரவலைப்பாடுகள் பாதிக்கப்படும்
மேற்குறிப்பிடப்பட்டவாறு கரைவலைப்படுகள் பாதிக்கப்படும் போதும் நாம்
இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். துறைமுகம் அமைக்கப்பட்டாலோ
அல்லது தனியாக கடலணை மட்டும் அமைக்கப்பட்டாலோ இவ்விடத்தில்
உள்ள பாடுகள் பாதிக்கப்படத்தான் செய்யும்.
4. மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட இருக்கும் இடம் எமது எதிர்கால
சந்ததியினரால் பயன்படுத்தப்படலாம்
தற்போதைய மதிப்பீடுகளின் படி 9 ஏக்கர் கடலோரக்காணி மட்டுமே
மீன்பிடித் துறைமுகத்திற்காக வாங்கப்படவிருக்கின்றது. இது எமது பேரூரின்
நிலவளத்துடன் ஒப்பிடும் போது மிகச்சொற்பமானது. இவ் ஏக்கர்களுக்கும்
உரிமையுடைய தனியாட்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
5. எண்ணெய் மற்றும் இரசாயனக் கழிவுகள் கடலில் கலந்து எமது ஊரின்
நிலவளத்தை பாதிக்கலாம்.
இலங்கையில் தற்போது 21 மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. இவை யாவும்
இலங்கை மீன்பிடி கூட்டுறவு ஸ்தாபனத்தினால் பராமாரிக்கப்பட்டு
வருகின்றன. இவை இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழ்
பேணப்படும் மிகக் கட்டுப்பாடான சட்டங்களினால் நிர்வகிக்கப்படுகின்றன.
இதேபோன்ற ஒரு பொறிமுறை எமது கிராமத்தில் அமைக்கப்படும் மீன்பிடித்
துறைமுகத்திலும் அமுல்படுத்தப்படும். இதனால் எண்ணெய் மற்றும் இரசாயன கழிவுகளின் ஐயப்பாட்டினைக் கொண்டிருக்கத் தேவையில்லை.
6. குடிநீர் பாதிப்படையலாம்
பொதுவாக கரையோர பிரதேசங்களின் குடிநீர் நிலைகள் பாதிக்கப்படுவதன்
காரணம் அளவுக்கதிகமான நிலத்தடி நீர் பயன்பாடு என்பதை நாம்
மனதில்கொள்ளவேண்டும். தற்போது அமைக்கப்படவிருக்கும் மீன்பிடித்
துறைமுகத்திற்கான நீர் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்
சபையினால் வழங்கப்படும் எந்தவொரு நிலத்தடி நீரும் இதற்காகப்
பயன்படுத்தப்படாது. இது சார்பான விளக்கங்களையும் உறுதிப்படுத்தல்
பத்திரங்களையும் நாம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் இலங்கை
மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

7. புகை மற்றும் பிற காரணிகளால் சு10ழல் பாதிக்கப்படல்.
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களின் படி சு10ழலியல் சார்பான எல்லாப்
பொறிமுறைகளும் எமது துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும். இது பற்றிய
முறையீடுகள் இருப்பின் பிரதேச செயலாளாரிடம் தெரிவிக்கலாம்.
8. பேசாலையில் கலை கலாச்சார இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
முதலில் பேசாலையில் அமைக்கப்பட இருப்பது ஒரு மீன்பிடித்துறைமுகமே
அன்றி கப்பல் துறைமுகம் அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கப்பற்துறைமுகத்தில் தான் வேறு நாட்டு கப்பல்களும் வேறு நாட்டவர்களும் வரவும் அதன் மூலம் கலாச்சாரம் பாதிக்கப்படவும் வாய்ப்புண்டு.
மற்றும் மன்னாரின் புவியியல் அமைப்பைக் கருதும் போது வேற்றுப் பிரதேச
படகுகள் குறிப்பாக தென்பகுதி படகுகள் மன்னாரிற்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலுள்ள தீடைகளைக் கடந்தோ அல்லது யாழ்ப்பாணத்தைச் சுற்றியோ தான் வந்தாகவேண்டும்.
6
எமது இழுவைப் படகுகள் இத்தீடைகளைக் கடந்து நடுக்குடா கடலிற்குச்
செல்லும் போது நாம் அனுபவிக்கும் சிரமங்களை நன்கு அறிவோம்.
இப்பிரதேசத்தை நன்கறிந்த எம்மவர்களுக்கே தீடைகளைக் கடக்கும் போது
சிரமமாயிருப்பின் தென்பகுதி மீனவர்களுக்கு அதுவும் எமது இழுவைப்
படகுகளை விடவும் அளவில் பன்மடங்கு பெரிய இழுவைப் படகுகளுக்கு
எத்துனை சிரமமாய் இருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
எனவே தீடைகளைக் கடந்து வேற்றுப் படகுகள் வருவதென்பது மிகவும்
அரிதானதொன்றாகும். யாழ்ப்பாணத்தைச் சுற்றி பேசாலையின்
துறைமுகத்திற்கு வரவேண்டுமாயின் நீண்டதூரம் பிரயாணிக்க வேண்டும்.
அத்துடன் பருத்தித்துறையிலும் குருநகரிலும் மீன்பிடித் துறைமுகங்கள்
அமைக்கப்படவிருப்பதனால் தென்பகுதி அல்லது வேற்றுப்பகுதி
மீனவக்கலங்கள் எமது பகுதிக்குள் வருவதென்பதானது ஒரு தேவையற்ற
ஐயப்பாடாகும்.

எமது மீனவ சமுதாயம் இலங்கை மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனத்தடன்
ஒப்பந்தங்களை மேற்கொள்வதனால் வேற்றுபிரதேச படகுகள் எமது
துறைமுகத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளில் ஈடுபடுவதனைத் தடுக்க முடியும்
(வாழைச்சேனை இதற்கு சிறந்த உதாரணமாகும்). அத்துடன் எமது ஊரைச்சுற்றி
எந்தவொரு அரச காணிகளும் இல்லாததனால் எமது ஊருக்குச் சொந்தமான தனியார் காணிகளை எமது கோயில் அனுமதியின்றி விற்க முடியாது போன்ற
ஊர்ச் சட்டங்களினால் பிற குடியேற்றங்களையும் தடுப்பதோடு எமது
கலாச்சாரத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

9. இத்துறைமுகத்தில் அமையப்பெற்றிருக்கும் கடைகள் வேறு
இனத்தவர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படலாம்.
பேசாலை மீனவர் சங்கம் மேற்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க அங்கு
அமைக்கப்பட இருக்கும் கடைகளில் அதிக வருமானம் ஈட்டக்கூடியதான
சிற்றுண்டிச்சாலையை நடத்துவதற்கான உரிமம் பேசாலை மீன்பிடி
சங்கத்துக்கே கட்டாயம் வழங்கப்படும் என ஏற்கெனவே இலங்கை மீன்பிடி
துறைமுக கூட்டுத்தாதபனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டும் அன்றி ஏனைய கடைகளுக்கான கேள்வி மனு கோரப்படும்
போதும் பேசாலை மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
தேவைப்படின் இதை எழுத்து வடிவிலும் பெற்றுக்கொள்ளலாம்.
துறைமுக கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க விருப்பதால் தற்போது மீனவர் சங்கத்தால் எரிபொருள் விற்பனையால் பெறப்படும் லாபமும் அந்த லாபத்தின் ஊடாக சமூகத்திற்கு மேற்கொள்ளப்படும் நற்காரியங்களும் பாதிக்கப்படலாம்.

எரிபொருள் நிரப்பு நிலையம் நேரடியாக இலங்கை மீன்பிடி துறைமுக
கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் இயக்கப்பட்டாலும்-அங்கு எரிபொருள்
நிரப்பும் மீனவ சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகளிற்கு நிரப்பப்படும்
எரிபொருளிற்கான பணத்தை மீனவ சங்கமே சேகரித்து கொடுக்கலாம்.
அப்போது ஒரு லீட்டரிற்கு இரண்டு ரூபாய் வீதம் அதிக கட்டணம் அறவிட
முடியும். தேவையெனில் இதை மீனவ சங்க யாப்பில் உள்ளடக்கலாம்.
அவ்வாறு செய்தால் இப்போது மீனவ சங்கம் எரிபொருள் விற்பனை மூலம்
ஈட்டும் அதே லாபத்தை தொடர்ந்தும் பெறலாம். இதற்குரிய ஏற்பாடும்
ஏற்கனவே மீனவ கூட்டுறவுச் சங்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.

10. வேறு இனத்தவர்கள் இத்துறை முகத்தில் வேலைக்கு அமர்த்தப்படலாம்
இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தால் நேரடியாக வேலைக்கு
அமர்த்தப்படும் உயர் உத்தியோகஸ்தர்களை தவிர்த்து ஏனைய வேலைகளுக்கு பேசாலையை சேர்ந்தவர்களே அமர்த்தப்படுவர் என மீன்பிடி துறைமுககூட்டுத்தாபனத்தால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தேவை எனின் இதையும் அவர்களுடன் பேசி எழுத்தில் பெறலாம்.

வேறு மாவட்ட மீனவர்களும் அவர்களின் படகுகள் மீன்பிடி துறைமுகத்தை
பயன்படுத்தலாம் அத்தோடு அவர்களும் இத்துறைமுகத்தில் மீன் வியாபாரம்
செய்வதால் எமது மீனவர்கள் நட்டத்திற்கு உள்ளாகலாம்
மீனவ சங்கத்தினூடு பேசாலை துறைமுகத்தில் பதிவு செய்யப்படும் படகுகள்
மட்டுமே இந்த துறைமுகத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படவோ மீன்
வியாபாரம் செய்யவோ முடியும்.
வெளி மாவட்ட மீனவர்கள் எரிபொருள் நிரப்பவும் படகு திருத்தவும் மட்டுமே
இத்துறைமுகத்திற்கு வரலாம். அவர்களின் படகுகள் நிரந்தரமாக இங்கு நிறுத்திவைக்கப்படவோ அல்லது அவர்களும் இத்துறைமுகத்தில் மீன் வியாபாரம் செய்யவோ முடியாது என மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திடம் எழுத்தில் பெற்று அதை நடைமுறைப்படுத்தலாம். வாழைச்சேனை துறைமுகத்தில் இதுநடைமுறையில் உண்டு.

11. ஒலுவில் துறைமுகத்தை போன்ற நிலை பேசாலை துறைமுகத்திற்கும்ஏற்படலாம்
ஒலுவில் துறைமுகம் ஆசிய அபிவிருத்தி வங்கியால் செய்யப்பட்ட திட்டமல்ல.
அதனால் முன்னாய்வுகள் சரிவர செய்யப்படாமல் கட்டப்பட்டது. கடல்
நீரோட்டத்தால் வருடாந்தம் இடம்பெயரும் மண்ணின் அளவு 200ää000
கனமீட்டர்கள் என்பதும் அந்த மண் ஒலுவில் துறைமுகத்திற்குள் படகுகள்
செல்லும் வழியை அடைத்து விடுவதால் பெரும் தொகை பணம் செலவிட்டு
குறுகிய காலத்திற்கு ஒரு தடவை அதை அகற்ற வேண்டி உள்ளது.
இதனாலேயே படகுகள் உட்செல்வத்தில் தடை ஏற்பட்டு இத்துறைமுகம்
சரியாக பாவிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் பேசாலை துறைமுகம் அமைக்கமுன்னரே ஆசிய அபிவிருத்தி வங்கி
துறைசார் நிபுணர்களை கொண்டு நடாத்திய ஆய்வுகளின் படி பேசாலை
கடலின் நீரோட்டத்தால் வருடாந்தம் இடம் பெயரும் மண்ணின் அளவு
வெறும் 2000 கனமீட்டர்கள் மாத்திரமே. எனவே ஒலுவில் போன்று மண்
அடைப்பு பிரச்சனைகள் பேசாலை துறைமுகத்தில் இடம்பெறாது என்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே  பேசாலை வாழ் படகு சொந்தக்காரர்களே...மீனவர்களே...
மீன்பிடிசங்கத்தினரே...பொதுமக்களே சற்று சிந்தியுங்கள். தேவையற்ற
சந்தேகங்களிற்காக எம்மண்ணை தேடிவந்திருக்கும் இத்துறைமுகத்தை
இழக்கப்போகிறோமா?? எம் வருங்கால சந்ததியும் ஆழ்கடல் மீன்பிடியில்
ஈடுபடமுடியாமல் போக நாம் காரணமாக போகிறோமா?? கொஞ்சம்
சிந்த்தித்து முடிவெடுங்கள்…!!! 

பேசாலை மீன்பிடித்துறை முகம் சம்பந்தமான விளக்கம்
தயாரித்து வழங்குவது
இலங்கை பொறியியலாளர் சம்மேளனம்
மன்னார் மாவட்டம்
(IESL)

மன்னார் 400 கோடி ரூபாய் செலவில் பேசாலை மீன்பிடித்துறைமுகம் சம்பந்தமான விளக்கம்.....பொறியியலாளர் சம்மேளனம் இலங்கை Reviewed by Author on October 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.