அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை,மாந்தையில் கண்டுபிடிப்பு! உலகின் மிகப் பழமையான கிராம்பு, மிளகுகள்


உலகின் மிகப் பழமையான கிராம்பு, மிளகுகள் இலங்கை,மாந்தையில் கண்டுபிடிப்பு!

மன்னார் – மாந்தையில் அகழ்வு ஆராய்ச்சியின் போது, கண்டுபிடிக்கப்பட்ட கிராம்பு, உலகின் மிகப் பழமையான கிராம்பு (லவங்கம்) என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் என அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, பழமையான மாந்தை துறைமுகத்தில் மிகப்பெறுமதி வாய்ந்த கருப்பு மிளகுகள் தொடர்பான சான்றுகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், ௨௦௦௯ /௨௦௧௦ [ 2009 - 2010 ]காலப்பகுதியில், பன்னாட்டு ஆய்வாளர்கள் குழுவொன்று மாந்தை துறைமுகப் பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டது.

சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம், சீலிங்ஸ், மற்றும் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தொல்பொருள் நிறுவகம் ஆகியன இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது, கண்டுபிடிக்கப்பட்ட கிராம்பு, பொது யுகம் ௯௦௦ [ 900 ] ஆம் ஆண்டுக்கும் ௧௧௦௦ [ 1100 ] ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, ஆய்வாளர் Eleanor Kingwell-Banham தெரிவித்துள்ளார்.

இது, இது ஆசியாவின் மிகப் பழைய கிராம்பு மாத்திரமல்ல, உலகிலேயே மிகப் பழமையான கிராம்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எட்டு மிளகுகள்,பொது யுகம் ௬௦௦ [ 600] தொடக்கம் ௭௦௦ [ 700] ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வு முடிவுகளை அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, அண்மையில் சீனா தொல்பொருள் ஆய்வாளர்களும் மாந்தை துறைமுகத்தில் அகழ்வாய்வுகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாந்தை-மாதோட்டம் - ஒரு சிறு குறிப்பு=

மாதோட்டம் என்பது, இலங்கைத் தீவில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் பட்டினம் ஆகும். பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை மாதொட்ட அல்லது மகாதித்த என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் மாந்தை என்றும் மாதோட்டம் என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. பொது யுகம் ௧௩ [13 ] ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய துறைமுகமாக இது விளங்கியதுடன் உலகளாவிய வணிகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களும், போசலின் பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் அகழ்வாய்வுகள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், இப்பகுதியில் பெருமளவில் மக்கள் வாழ்ந்து வந்ததையும், மாதோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் வேளாண்மை முயற்சிகள் இடம்பெற்றதையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இது இலங்கைத் தீவின் வடமேற்குக் கரையில், இன்றைய வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்திருந்தது. மல்வத்து ஓயா என அழைக்கப்படும் ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இப் பட்டினம், அதே ஆற்றங்கரையில் அமைந்திருந்த பண்டைய தலைநகரமான அனுரதபுரத்துடன் சிறப்பான போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்திருந்த இது, தென்னிந்தியாவுடனான இலங்கையின் வணிகத் தொடர்புக்கு வசதியாக இருந்தது. மிகப் பழைய காலத்திலிருந்தே இந்நகரில் தென்னிந்தியர்களே பெருமளவில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகின்றது. இதன் அருகே திருக்கேதீச்சரம் எனப்படும் புகழ் பெற்ற சிவன்கோயில் இருந்தது.

இத் துறைமுகத்தின் முக்கியத்துவம் பொது யுகம் ஏழாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் குறையத் தொடங்கியது. தென்கிழக்கு ஆசியாவின் ஸ்ரீவிஜய இராச்சியம், கிழக்கு - மேற்குக் கடல் வணிகத்தின் முக்கிய மையமாக மாறியதால், அரபிக் கடல் பகுதியின் வணிக முக்கியத்துவம் வங்கக் கடலுக்கு மாறியது. மாதோட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் தலைநகர் அனுரதபுரத்தையும் பாதித்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் தலைநகர் இலங்கையின் கிழக்குக் கரைக்கு அண்மையாக இருந்த பொலநறுவைக்கு மாற்றப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரும் மாதோட்டம், இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமான வணிகத்துக்கு முக்கிய துறையாக விளங்கியது. ௧௩ [ 13 ] ஆம் நூற்றாண்டு வரை இந்நிலை நீடித்தது. இதன் பின்னர் இத் துறைமுகமும் பட்டினமும் பழைய முக்கியத்துவத்தை முற்றாகவே இழந்து விட்டது எனலாம்.

Archaeologists believe they might have found the oldest clove in the world at an excavation site from an ancient port in northern Sri Lanka, local media reports said here Friday.

At the ancient port in Mannar, which dates back to around 200 BC, archaeologists have also found evidence of a high value black pepper.

Media reports said that in 2009/2010, after the end of the island's civil war between government forces and Tamil Tiger rebels, a multi-national team of researchers went to the Mantai Port and began excavations.

The work was jointly carried out by the Sri Lankan Department of Archaeology, SEALINKS and the University College London (UCL) Institute of Archaeology.

Archaeologist Eleanor Kingwell-Banham told international media that the clove from Mantai was found in a context dating to 900-1100 AD, making it not only the oldest clove in Asia, but also the oldest in the world.

நன்றி=

௧. புதினப்பலகை,௨ . Eleanor Kingwell-Banham - NERC Research Associate,University College London, Gower Street, London, WC1E 6BT







இலங்கை,மாந்தையில் கண்டுபிடிப்பு! உலகின் மிகப் பழமையான கிராம்பு, மிளகுகள் Reviewed by Author on January 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.