முள்ளிவாய்க்கால் பேரவலம்! பிரித்தானியாவில் 3ஆம் நாள் போராட்டம் -
இலங்கை அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ஆம் ஆண்டு நினைவெழுச்சி வாரமானது கடந்த 11.05.2019ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்திற்கு முன்னால் ஆரம்பமாகியது.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற இந்த எழுச்சி நிகழ்வில் அடையாள உண்ணா விரதம், எழுச்சி உரை, முள்ளிவாய்க்கால் இனஅழிப்புத் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் போன்றன நடைபெற்று வருகின்றன.
நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாளான நேற்றைய தினம் வழமைபோல் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை இளையதம்பி தெய்வேந்திரன் ஏற்றிவைத்தார்.
அதன் பின் மலர் வணக்கத்தைத் தொடர்ந்து தமிழீழ உணர்வாளர்களான டென்சிகா, சுஜீவன், பாலகிருஷ்ணன், நிரோச்குமார் ஆகியோரால் அடையாள உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எமது போராட்டத்தின் வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனையை ஒவ்வொரு ஈழத்தமிழரும் நினைவில் நிறுத்தி இந்த முள்ளிவாய்க்கால் 10ஆம் ஆண்டு நினைவெழுச்சி வாரத்திலும் 18.05.2019 மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும் நினைவெழுச்சிப் பேரணியிலும் கலந்துகொண்டு தமிழீழம் நோக்கி வீறுகொண்டெழுவோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலம்! பிரித்தானியாவில் 3ஆம் நாள் போராட்டம் -
Reviewed by Author
on
May 15, 2019
Rating:

No comments:
Post a Comment