அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையம் திறந்து வைப்பு-படங்கள்

மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேச மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாச மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா இன்று16-05-2019 காலை 10 மணியளவில் இடம் பெற்றது.

குறித்த மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையத்தினை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதன் போது மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி சி.எஸ்.அமிர்தநாதன்,ஓய்வு பெற்ற மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.செபமாலை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

- மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதோடு,மீன் பிடி உபகரணங்களுயும் மீனவ சங்கங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

-மேலும் நீண்டகாலமாக கடமையாற்றி ஓய்வு பெற்ற மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.செபமாலை அவர்களுக்கு மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

-குறித்த நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாச பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையம் திறந்து வைப்பு-படங்கள் Reviewed by Author on May 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.