அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-ஈச்சளவக்கை விபத்தில் குடும்பஸ்தர் பலி

மன்னார் மாந்தை மேற்கு  பிரதேச செயலகப்பிரிவின்   பள்ளமடு  பெரியமடு வீதி ஈச்சளவக்கைப்பகுதியில்  இன்று 17-05-2019 மாலை 3:00 மணியளவில்  பள்ளமடுப்பகுதியில்  இருந்து  மது போதையில்  இரு மோட்டார் சைக்கிளில்   அதி வேகமாக  வந்ததில்  முன்னே வந்தவர் ஈச்சளவக்கை விளையாட்டு மைதானத்தின் பகுதி வீதி  வளைவில்  வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை  விட்டுவிலகி  வீழ்ந்துள்ளார் இவ்விபத்தில்  படுகாயமடைந்த  மன்னார் எழுத்தூரை சேர்ந்த  55 வயதுடைய  அருள்நேசன் வாசன்.மோசஸ் என்பவர்  பள்ளமடு வைத்தியசாலைக்கு எடுத்துசெல்கின்ற போது  வழியில் உயிர் இழந்துள்ளார்.

 மன்னார் மாவட்ட  வைத்திய சாலைக்கு எடுத்து சென்று   மரணவைத்திய விசாரணையின் பின்னர் உறவினர்களிடம்  உடலம் கையளிக்கப்படும் என்பதோடு  இதன் விசாரணைகளை  அடம்பன்  பொலிஸ் பதில் பொறுப்பதிகாரியும் மன்றும் வீதிபோக்குவரத்து பொலிஸ்  அதிகாரியும்  உடன் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்-ஈச்சளவக்கை விபத்தில் குடும்பஸ்தர் பலி Reviewed by Author on May 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.