அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் தொடர்பில் சர்ச்சை. உண்மையை வெளிக்கொண்டு வந்தார் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன்-(படம்)

மன்னார் பிரதேச சபையின் கடிதங்களை பாவித்து முறைக்கேடாக பாவிக்கபட்ட உழவு இயந்திரத்தை பொலிசாரின் பிடியில் இருந்து மீட்பதற்காக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மன்னார் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன் இன்று (24) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,

மன்னார் பிரதேச சபையில் எந்த விதமான பதிவிலும் இல்லாத குறித்த உழவு இயந்திரம் மன்னார் மாவட்டத்தின் அரசியல் வாதி ஒருவரின் சகோதரரின் தோட்டத்தில் வேலைகளுக்கு நின்ற குறித்த உழவு இயந்திரத்தில் களவாக மாடு ஏற்றி சென்ற போது தலை மன்னார் பொலிசாரினால் பிடிக்கபட்டது.

அப்போது குறித்த உழவு இயந்திரத்துக்குரிய அனுமதிப்பத்திரங்கள் அற்ற நிலையில் குறித்த உழவு இயந்திரம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸாரினால் அண்மையில் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இவ் உழவு இயந்திரம் மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனம் என குறிப்பிட்டு சம்மந்தபட்ட அமைச்சுக்கு கடிதங்கள் அனுப்பி இவ் உழவு இயந்திரத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தன்னிச்சையாக தவிசாளர் மேற்கொண்டார்.
அதற்கு அமைவாக கிடைக்கப்பெற்ற ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மீண்டும் குறித்த உழவு இயந்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

குறித்த வாகனம் பிரதேச சபைக்கு சொந்தமான வாகம் எனின் இவ்வளவு காலமும் எங்கு நின்றது என்பது தெரியாது.தற்போது மன்னார் பிரதேச சபையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பல தன்னிச்சையான முடிவுகளையும் சபைக்கு அறிவிக்காமல் செய்து வருவதாக பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் 17 ஆவது கூட்டம் கடந்த 20 ஆம் திகதி இடம் பெற்றது.
இதன் போது குறித்த பிரச்சினை தொடர்பாக சபையில் முன் வைத்து உரை நிகழ்த்தினேன்.

எனது கருத்து சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.எனவே குறித்த உழவு இயந்திரம் மீண்டும் மன்னார் நீதி மன்றத்துக்கே ஒப்படைக்க வேண்டும் .

இந்த உழவு இயந்திரம் ஒருவரின் தனிப்பட்ட பாவனையில் இவ்வளவு காலமும் இருந்தது வந்ததுடன் சட்விரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தபட்டு வந்துள்ளதாக அறிகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் தொடர்பில் சர்ச்சை. உண்மையை வெளிக்கொண்டு வந்தார் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன்-(படம்) Reviewed by NEWMANNAR on August 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.