அண்மைய செய்திகள்

recent
-

இந்தியத் துணை ஜனாதிபதி எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை விஜயம்

 இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 


இந்த விஜயத்தின் போது இந்திய துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளார். 

அத்துடன், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவுள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன. 

குறிப்பாக, 'டித்வா' புயலினால் பாதிப்படைந்தோரின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. 

இந்திய துணை ஜனாதிபதி இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். 

இந்த விஜயத்தின் போது துணை ஜனாதிபதியுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழுவொன்றும் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. 

சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்தியத் துணை ஜனாதிபதி எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை விஜயம் Reviewed by Vijithan on April 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.