அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 30 மில்லியன் ரூபா நிதி இன்று இரவு 8 மணிக்குள் உரிய பதிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்- திரு.நோயல் ஜெயச்சந்திரன்

அண்மையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளை மக்கள் கடன் பட்டு வேலைகளை முடித்திருந்தநிலையில் வீடமைப்பு அதிகார சபையினரால்  உரிய பணம் வழங்கப்படாமையினால் மக்கள் பாரிய சிரமங்களையும் வீடமைப்பு அதிகார சபையில் அதிருப்தியும் கொண்டிருந்தார்கள் இவற்றை தெளிவு படுத்தும் வகையில் சபையினரின் மாவட்டக் காரியாலயத்தில் இன்று (11) பத்து மணியளவில் ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்கள்  இந்த சந்திப்பின் போதே மாவட்ட முகாமையாளர் திரு.நோயல் ஜெயச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பாக மாவட்ட முகாமையாளர்  மேலதிகமாக கருத்து தெரிவிக்கையில்  பொது மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தலைமை அலுவலகத்தால் எமக்கு கிடைக்கும் பணம் முன்னுரிமை அடிப்படையில்  மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது தற்பொழுது கிடைக்கப்பட்டுள்ள முப்பது மில்லியன் ரூபாவும் முன்னுரிமை அடிப்படையில்  வழங்கப்படுவதுடன் வீட்டுத்திட்டப்பயனாளிகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட  ஐந்து லட்சம் ரூபா ஏழரை லட்சம் ரூபா பெருமதியான தொகையில் ஒரு ரூபா குறைவில்லாமல் வழங்கப்படும் என்று  தெரிவித்த மாவட்ட முகாமையாளர்  நோயல் ஜெயச்சந்திரன்.

தேசிய வீடமைப்ப அதிகார சபைக்குள் அரசியல் தலையீடு இருக்காது அத்துடன் தேசிய வீடமைப்பு தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகள் ஆகக் குறைந்த செலவுகளில் நடைபெறுவதுடன் ஊழியர்களின் அதிகளவான பங்களிப்புடனேயே நடை பெறுகிறது என்பதுடன் வடக்கு கிழக்க தவிர்ந்த சிங்களப்பகுதிகளில் நடை முறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் யாவும் மீளச் செழுத்த வேண்டிய கடன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது ஆனால் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நடைமுறைப் படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் யாவும் மானிய முறையில்  இலவசமாக வடக்க கிழக்கு மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்து கொடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டு;திட்டங்களை ஆரம்பிக்கும் போது பத்தாம்  மாதத்திற்குள் வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று எம்மால் கூறப்பட்டது திறை சேரியில் இருந்து பணம் வர சற்று தாமதித்த  காரணத்தால் கால அவகாசத்தை நீடிப்போம்  வேறு ஏதேனும் காரணத்தால் வீட்டுத்திட்டம் நின்று விடுமோ அல்லது பணம் கிடைக்காமல் விட்டுவிடுமோ என்று மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை   பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்குரிய பணம் எந்த காரணத்தினாலும் தடைப்படாமல்  வழங்கப்படும் என்று  மன்னார் மாவட்ட  வீடமைப்ப அதிகாரசபையின்  மாவட்ட முகாமையாளர் திரு நோயல் ஜெயச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மன்னார் மாவட்ட முகாமையாளர் நோயல் ஜெயச்சந்திரன் அவர்களுடன் முகாமையாளர் டி.யூட்குலாஸ்  கணக்காளர் கே.சிவப்பிரதாப் போன்றோர் கலந்து கொண்டார்கள்.






மன்னார் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 30 மில்லியன் ரூபா நிதி இன்று இரவு 8 மணிக்குள் உரிய பதிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்- திரு.நோயல் ஜெயச்சந்திரன் Reviewed by Author on September 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.