அண்மைய செய்திகள்

recent
-

கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்களை அகற்ற வேண்டுமா?


பொதுவாக சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி வயதான தோற்றம் அல்லது சுருக்கங்கள் இருந்தால் முகத்தின் அழகே கேடுத்துவிடுகின்றது.
கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றது.
அதில் குறிப்பாக புகைபிடித்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, தவறான உணவுப் பழக்கம், மரபியல் கோளாறு மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், இளமைப் பருவத்திலும் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படலாம்.
இதனை எளிய முறையில் அகற்ற முடியும். தற்போது அவற்றில் வீட்டில் செய்யக்கூடிய சில குறிப்புகளை பற்றி பார்போம்.

  • 1 அல்லது 2 தேக்கரண்டியளவு காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளுங்கள். பாலில் ஒரு காட்டன் பஞ்சை நனைத்து கண்களைச் சுற்றி அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். நல்ல முடிவுகளை விரைவான பெறத் தினமும் இந்த முறையைப் பின்பற்றலாம்.
  • ஒரு தேக்கரண்டியளவு தர்பூசணி கூழ் மற்றும் ஒரு தேக்கரண்டியளவு பாலாடை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் பேஸ்ட் போல் உங்களுக்குக் கிடைக்கும். இதைக் கண்களைச் சுற்றித் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டு பின்னர் கழுவுங்கள்.
  • ஒரு கிண்ணத்தில் கொத்தமல்லி மற்றும் வெந்தயம் பேஸ்ட் இரண்டையும் ஒன்றாகக் கலந்து 1 டம்ளர் சூடான நீரை அதில் ஊற்றி நன்றாகக் கலக்கி பின்னர் இரண்டு காட்டன் எடுத்து அதில் நனைத்து, 10 நிமிடங்களுக்குப் பிறகு அவற்றை நீக்கி விட்டு மற்றொரு காட்டன் பஞ்சுகளை கண்களின் மேல் வைக்கவும். மீண்டும் 10 நிமிடங்களைக் கடந்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கண்களைக் கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு 2 முதல் 3 செய்யலாம்.
  • ஒரு தேக்கரண்டியளவு ஓட்ஸ் மாவு மற்றும் ஒரு தேக்கரண்டியளவு சூடான பால் எடுத்து கிண்ணத்தில் ஓட்ஸ் மாவு போட்டு மென்மையான பேஸ்டாக கிடைக்கும் வரை சிறிது சிறிதாகச் சூடான பாலை ஊற்றுங்கள். பின்னர் பேஸ்ட் எடுத்து உங்கள் கண்களைச் சுற்றி தடவி 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். சுருக்கங்கள் விரைவில் அகற்ற விரும்பினால் வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யுங்கள்.
  • 1/2 தேக்கரண்டியளவு தயிர், 1/2 தேக்கரண்டியளவு தேன், ½ கப் அன்னாசி கூழ் பேஸ்ட் எடுத்து ஒரு கிண்ணத்தில் மூன்று பொருட்களையும் போட்டுக் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை எடுத்து கண்களைச் சுற்றித் தடவுங்கள். 10 நிமிடங்கள் வைத்துக் காய்ந்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.
  • ஒரு தேக்கரண்டியளவு பிசைந்த வாழைப்பழம், ஒரு தேக்கரண்டியளவு வெண்ணெய் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து கண்களுக்கு அடியில் மற்றும் கண்களைச் சுற்றிலும் தடவுங்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.
  • 2 முதல் 3 தேக்கரண்டியளவு பிசைந்த உருளைக்கிழங்கு மற்றும் 1 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் கலக்கும் போது உங்களுக்கு நல்ல திடமான பேஸ்ட் கிடைக்கும். இந்த பேஸ்டை கண்களைச் சுற்றித் தடவி 15-20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
  • 4 முதல் 5 அரைத்த ரோவன் பெர்ரி, ஒரு முட்டை, ஒரு தேக்கரண்டியளவு தயிர், ஒரு தேக்கரண்டியளவு தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். உங்கள் கண்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடவுங்கள். அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
  • 4 முதல் 5 பிசைந்த திராட்சைகள் மற்றும் 1 தேக்கரண்டியளவு தயிர், பிசைந்த திராட்சை மற்றும் தயிரை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து உங்கள் கண்களைச் சுற்றித் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
  • 5 முதல் 10 கிராம் வெந்தய இலைகள் மற்றும் தேவையானளவு தண்ணீர். வெந்தய இலைகளை எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை உங்கள் முகம் முழுவதும் தடவலாம். பின்னர், 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள் விரைவில் சுருக்கங்கள் காணாமல் போய்விடும்.
கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்களை அகற்ற வேண்டுமா? Reviewed by Author on September 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.