அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்கள் பேரூந்துக்குள்ளும் பேரூந்து இன்றியும் படும்பாடு…..வீதிகளில் காயும் கருவாடு போல …..

மன்னார் மாவட்டத்தில் தற்போது சில விடையங்கள் நல்ல முறையில் நடைபெற்று வந்தாலும் பல விடையங்கள் இன்னும் நல்ல முறையில் நடைபெறவில்லை என்பது கவலைக்குரிய விடையம் தான் அப்படியான விடையங்கள் ஏராளம் உள்ளது அதில்  மாணவர்கள் தொடர்பானது தான்  நாம் பார்க்க இருக்கின்ற விடையம்.

மாணவர்களின் கல்வி என்று வரும்போது எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும் அல்லவா எத்தனை பேர் மாணவர்களின் கல்விக்கு சகலவழிகளிலும் உதவியாய் உள்ளீர்களா என்று எண்ணிப்பாருங்கள்
அப்படி எண்ணிப்பார்க்கும் போது உங்களின் பதில்….?

ஆம் மன்னார் நகரப்பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு பாடசாலை செல்லும் மாணவமாணவிகளுக்கு பேரூந்துப்பயணம் பெரும் சுமையாகவே உள்ளது. ஏற்கனவே நாட்டாமை போல் முதுகில் புத்தகப்பையை சுமக்கும் மாணவமாணவிகளுக்கு பேரூந்தும் அதில் பணயம் செய்யும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளும் சொல்லில் அடங்காது……

மன்னார் நகரப்பகுதில் இருந்து சங்குப்பிட்டி பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேரூந்தில் திருக்கேதீஸ்வரம் அடம்பன் பாப்பா மோட்டை விடத்தல்தீவு பள்ளமடு கள்ளியடி வெள்ளாங்குளம் நாச்சிக்குடா முழங்காவில் உள்ள பாடசாலைகளுக்கும் அது போல தள்ளாடி ஊடாக வவுனியா கொழும்பு மட்டக்களப்பு திருகோணமலை செல்லும் பேரூந்தில்
நானாட்டான் முருங்கன் மன்னார் வங்காலை கட்டையடம்பன் சின்ன பண்டிவிரிச்சான் பெரிய பண்டிவிரிச்சான் மடு மடுக்கரை பறயராயன் குளம் மற்றும் சிலாபத்துறை அரிப்பு கொண்டச்சி கொக்குப்படையான் முசலி போன்ற பகுதிகளில் இன்னும் பல கிராமங்கள் உள்ளன  உள்ள பாடசாலைகளுக்கு செல்லுகின்ற மாணவமாணவிகளுக்கு  ஏற்படுகின்ற

பிரச்சினைகள்  பாருங்கள்….
  • இருக்க ஆசனம் கொடுப்பதில்லை
  • நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டும் அதுவும் முதுகில் புத்தக மூட்டையோடு
  • பயணம் குறைந்தது 30 நிமிடம் முதல் 1மணித்தியாலம் வரையாகும்
  • சில பிள்ளைகள் காலை உணவு இன்றி வரும்
  • சடுதியாக பிறேக் போடும் போது நிற்க முடியாமல் தடுமாறி விழுதல் காயம் ஏற்படல்
  • பெண் மாணவிகளுக்கு தொந்தரவுகள்
  • ஒளி ஒலி பாடல்கள் மற்றும படங்களில் இரட்டை அர்த்தங்கள் கொண்டவையாக இருத்தல் மாணவர்களின் கற்கும் சிந்தனையில் குழப்பம்.
  • பல கிராமங்களுக்கு குறைந்தது பிரதான வீதியில் இருந்து குறைந்தது 5முதல் 10 கிலோ மீற்றர் தூரம் நடந்தே செல்ல வேண்டும்.
  • பேரூந்துக்குள்ளும் நின்று கொண்டு பயணித்து விட்டு பசிக்களையோடு இவ்வளவு தூரம் புத்தக மூட்டையோடு நடக்க முடியுமா சிந்தித்துப்பாருங்கள்.
  • மழை காலத்தில்  பேரூந்தினை தவற விடும்  மாணவர்கள் வெள்ளத்தில் விளையாடுதல் மற்றும் சொறி சிரங்கு  நோய்கள் ஏற்படும் அல்லவா.... இறப்புகளும் ஏற்படும் அபாயம்
  • கிராமப்புறங்கள் உள்ள மாணவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள்
  • சில இடங்களுக்கு ஒரு பேரூந்து மட்டும் தான் காலை ஒரு தடவை மாலை ஒரு தடவை இப்பேரூந்தை விட்டால் வேற பேரூந்தும் இல்லை அன்றைய நாள் மாணவர்களுக்கு பெரும் போராட்டம் தான் அன்னம் தண்ணீர் இல்லாமல் வீதிகளில் நிற்கவேண்டிய நிலை எண்ணிப்பாருங்கள்.
  • மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சி என்று வகுப்பறையினை மட்டும் பார்வையிடும் கல்வித்திணைக்கள அதிகாரிகள் மாணவமாணவிகளின் புறக்காரணிகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும் அல்லவா…
என்ன செய்யலாம்…..
  • மாணவமாணவிகளின  நலன் கருதி தனியான பேரூந்து வசதினை ஏற்படத்திக்கொடுத்தல் வேண்டும்.
  • ஒரு தடவை என்று இருக்கின்ற பேரூந்தினை இரண்டு தடவையாவது பயணிக்க ஆவணசெய்ய  வேண்டும்.
  • பணத்தினையும் இலாபத்தினையும் கருத்தில் கொண்டு செயலாற்றாமல் மாணவர்களின் கல்விக்கான சேவை நோக்க செயற்படுங்கள்.
  • மாணவர்களின் கல்வியால் தான் மன்னார் முன்னிலை பெறும் என்பதை மறந்து விடாதீர்கள் 
  •  அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் அதன் திணைக்களத்தின் அதிகாரிகள்  சிந்திக்க வேண்டிய தருணம் இது,
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களின் கடமைகளை எண்ணி சரிவரச்செய்தால் நல்ல வளமான மாணவசமூகத்தினை உருவாக்கும் கருவிகளாக இருங்கள்
இன்றே விரைந்து செயற்படுங்கள்  நன்றே நடக்கும்…..


-மன்னார்விழி-

மாணவர்கள் பேரூந்துக்குள்ளும் பேரூந்து இன்றியும் படும்பாடு…..வீதிகளில் காயும் கருவாடு போல ….. Reviewed by Author on October 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.