அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபையின் 20 ஆவது அமர்வை ஒத்தி வைத்து விட்டு வெளியேறிய சபையினர் தவிசாளர் உற்பட அளும் தரப்பு உறுப்பினர்கள்- -எதிர் தரப்பு உறுப்பினர் ஏ.ரி.லுஸ்ரின் குற்றச்சாட்டு-

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் உற்பட அளும் தரப்பு உறுப்பினர்கள் சபை அமர்வை குழப்பி சபையை ஒத்தி வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ரி.லுஸ்ரின் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் பிரதேச சபையின் 20 ஆவது அமர்வு இன்று (7) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சபையின் தலைவர்  எச்.எம்.முஜாகீர் தலைமையில் ஆரம்பமாகியது.

சபை அமர்வு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடம் பெற்றுக் கொண்டிருந்த போது உடனடியாக சபையில் கதைக்க வேண்டிய விடையத்தை பின்னுக்கு வைத்து விட்டு பிரிதொரு விடையத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இதனால் சபையில் வாதி பிரதி வாதங்கள் ஏற்பட்டது.நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபைக் கூட்டத்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்தோம்.
அவ்வாறு இருக்கின்ற போது ஆளும் தரப்பு உறுப்பினர் டிப்னா குரூஸ் சபையில் எழுந்து நின்று கடந்த வருடம் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து சில வேளைத்திட்டங்கள் இன்னும் இடம் பெறவில்லை.

குறிப்பாக தனது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட பூங்காவிற்கான வேளைத்திட்டம் இது வரை இடம் பெறவில்லை.
எனவே கடந்த வருடம் நடை முறைப்படுத்தப்பட்ட வேளைத்திட்டம் முடியடைய வில்லை.

இந்த நிலையில் புதிய வரவு செலவு திட்டத்தை கொண்டு வருவதை ஏற்க முடியாது என ஆளும் தரப்பு உறுப்பினர் தெரிவித்தார்.இந்த சபையை குழப்பும் வகையில் ஏற்கனவே திட்டமிட்டே செயல் பட்டுள்ளதாக நங்கள் கருதுகின்றோம்.சபையில் எந்த விதமான பிரச்சினைகளும் இடம் பெறாத நிலையில் சபையை ஆளும் தரப்பு உறுப்பினர்களே குழப்பினார்கள்.2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை வரைந்திருந்தார்கள்.

அத்திட்டம் இன்றைய தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட இருந்த போது எதிர் தரப்பினரால் தோற்கடிக்கப்படும் என்கின்ற நிலையை அறிந்து அதில் இருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காக தாங்களாகவே சபை அமர்வை குழப்பிக் கொண்டு சபையில் இருந்து வெளியேறி விட்டனர்.
14 நாட்களுக்கு சபையை ஒத்தி வைத்து விட்டு சபையின் தவிசாளர் உற்பட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் வெளியேறி விட்டனர்.
நாங்கள் சட்ட சடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

சபையினை நடத்த முடியாத சூழல் ஒன்று தவிசாளருக்கு ஏற்படும் பட்சத்தில் சபையை ஒத்தி வைக்க முடியும்.அவ்வாறான சூழல் சபையில் ஏற்படவில்லை.

வேண்டும் என்றே சபையை குழப்பி விட்டு சபையை அவமதித்து விட்டு சென்றுள்ளனர்.எங்களுடைய தரப்பிலே 12 உறுப்பினர்கள் இருக்கின்றோம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேரூம், ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர் ஒருவரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 2 பேரூம்,சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் உப தவிசாளர் உற்பட உள்ளனர்.

மொத்தமாக 12 உறுப்பினர்கள் உள்ளோம்.பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.
21 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்துள்ளனர்.சபையின் தவிசாளர் உற்பட 8 பேர் திட்டமிட்டு சபையை குழப்பி எம்மை அவமதித்து சபையை ஒத்தி வைத்தி சென்றுள்ளனர்.

நாங்கள் சட்ட நடவடிக்கைக்கு செல்லவுள்ளோம்.சபை சட்ட சிக்களை எதிர்நோக்க உள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.இவ்விடையம் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாகிரை தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.


மன்னார் பிரதேச சபையின் 20 ஆவது அமர்வை ஒத்தி வைத்து விட்டு வெளியேறிய சபையினர் தவிசாளர் உற்பட அளும் தரப்பு உறுப்பினர்கள்- -எதிர் தரப்பு உறுப்பினர் ஏ.ரி.லுஸ்ரின் குற்றச்சாட்டு- Reviewed by Author on November 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.