நானாட்டன்-அச்சங்குளம் கிராம மக்களின் வாழ்வாதரத்தை பறிக்கும் வனவளத்துறையினர்- மக்களின் எதிர்ப்பு
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் கால் நடைகளின் மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்ட பகுதிகளிலும் மீன் பிடி ஓடைப் பகுதிகளிலும் வேலியிட வந்த வனவளத்துறையினர் பொது மக்களின் எதிர்ப்பினை அடுத்து அந்த முயற்சியை கை விட்டு சென்றார்கள்
குறித்த சம்பவம் நேற்று புதன் கிழமை(6) மாலை; இடம் பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் சுமார் 200 க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். கடற்தொழில் மற்றும் விவசாயம் இவர்களது பிரதான ஜீவனொபாய தொழில்களாகும்.
அந்த கிராமத்து மக்களின் கால் நடைகளுக்கு மெய்ச்சல் நிலமாக அறிவிக்கப்பட்ட பகுதி மற்றும் மீன்பிடிக்காக கடலுக்க செல்லும் ஓடைப்பகுதியினை மறித்து எட்டு அடுக்கு நெற் வேலியிட வன வள திணைக்கள்ததினர் நேற்று புதன் கிழமை மாலை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் புவனம் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவித்தமையினை தொடர்ந்து வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
நீண்ட காலமாக விவசாயம் மற்றும் கடற்தொழில் ஈடுபட்டு வரும் நாங்கள் இங்குள்ள மேட்டு நிலத்தில் கால் நடைகளை மேய்ச்சலுக்காக பயன்படுத்தி வந்தோம்.
அருகில் உள்ள ஓடை வழியாக நண்டு , இறால் , போன்றவை பிடிப்பதுடன் இந்த ஓடை வழியாகவே பெருங்கடலுக்கு சென்று மீன் பிடியில் ஈடுபட்டு வருகிறோம்.வனவள திணைக்களத்தினர் குறித்த பகுதிகளில் எல்லை வேலிகளை போட்டு பாதையை அடைத்து விட்டால் எமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விடும்.
இது பாரம்பரியமான எமது பூமி . இங்கு வன வளப்பிரிவினர் எல்லை இட்டு நில அபகரிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது.
இந்த விடயத்தில் எமது முழு எதிர்ப்பினை காட்டுவோம் என்று அச்சங்குளம் கிராமத்து விவசாயிகளும் மீனவர்களும் தெரிவித்தனர்.

Reviewed by Author
on
November 07, 2019
Rating:

No comments:
Post a Comment