அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு-மன்னார் மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன்-

மன்னார் திருக்கேதீச்சர ஆலய வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று திங்கட்கிழமை04/11/2019 மன்னார் மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.அப்துல்லா   முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

திருக்கேதீச்சர ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார். இதன் போது சட்டத்தரணி சுமந்திரன் தீருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபையின் செயலாளர் எஸ் எஸ் இராம கிருஸ்ணன் அவர்களின் பெயர் இணைக்கப்பட்டிருக்கும் விதத்தை ஆட்சேபித்து வாதாடினார்.

-குறித்த வழக்கு விசாரனை தொடர்பாக திருக்கேதீச்சரம் ஆலய நிர்வாகத்தினருக்கு சார்பாக வழக்கில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,,,

திருக்கேதீச்சர ஆலய வளைவு உடைப்பு சம்பந்தமான வழக்குகள் மன்னார் நீதவான் நீதி மன்றத்திலும் மன்னார் உயர் நீதி மன்றத்திலும் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த வழக்குகளுக்கான பின்னனி  திருக்கேதீச்சர ஆலய வளைவு ஒரு சமய தரப்பினரால் இடித்து வீழ்த்தப்பட்டிருந்தது. அது சம்பந்தமாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு அதனை செய்தவர்கள் அங்கு நந்திக் கொடியை மிதித்தவர்கள் போன்றோருக்கு எதிராகவும் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதேவேளையில் மற்றையவர்கள் திருக்கேதீச்சர ஆலய நிர்வாகக் குழுவிற்கு எதிராக  அனுமதியில்லாமல் நுழைவாயில் வளைவை கட்டினார்கள் என்று இன்னுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளும் நேற்று திங்கட்கிழமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுக்கப்பட்டது.

திருக்கேதீச்சர நிர்வாக குழு சார்பாக நான் முன்னிலையாகி இருந்தேன். அதில் பொலிஸார் இன்னும் விசாரணைகளை முடிக்கவில்லை என்கின்ற காரணமாகவும் தேர்தல் சம்பந்தமாக விசேட சேவைக்கு சென்றிருப்பதாக கூறியதாலும்  பிக் போடப்பட்டுள்ளது.

அதேவேளையில் சில நாட்களுக்கு முன்னதாக  இந்த நுழைவாயில் வளைவு மீண்டும் செய்யப்படக் கூடாது என்று கோரி மாந்தை கிறிஸ்தவ ஆலயத்தின் நிர்வாகக் குழுவினர் எழுத்தானை மனு ஒன்றை மேல் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.

 அதில் 23ஆவது எதிர் மனு தாரராக திருக்கேதீச்சர ஆலயத்தின் இணைப்புச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
 அது சார்பாக நேற்று (4) நான் மேல் நீதிமன்றத்தில்  முன்னிலையானேன். அவருடைய பெயர் மனுவில் குறிப்பிடப்படவில்லை. பூர்வாங்க ஆட்சேபனையை நான் எழுப்பி இருந்தேன்.

  நீதி மன்றத்திலே  வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்படுகின்ற போது  அவர் சட்ட நபராக இருக்க வேண்டும் அல்லது சாதாரண நபராக இருக்க வேண்டும்.
 பதவியை மட்டும் குறித்து ஒருவரை தரத்தாரக அறிவிக்க முடியாது.  அப்படி அறிவிக்க கூடிய ஒரே ஒரு விதி விளக்கு பொதுச் சேவையில் இருக்கின்ற உத்தியோகத்தருக்கு மட்டும் தான்  உள்ளது என்று மேல் நீதிமன்றத்தின் விதிகளை மேற்கோல் காட்டி  நான் சமர்ப்பனங்களை செய்திருந்தேன்.

அந்த வேளையில் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அரச குணரெட்ண அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு மனுவை திருத்துவதற்கு  அனுமதியை கோரினார்.

இந்த வேளையில் மனுவை திருத்த முடியாது என்றும் மனுவில் உள்ள குறைபாட்டினை இனி நிவர்த்தி செய்ய முடியாது என்றும்  இந்த முதல் நிலை மனுவினை வைத்தே மனு  நிராகரிக்கப்பட வேண்டும்  என்று நான் சமர்ப்பனம் செய்ததை அடுத்து  மனுவை திருத்தவதற்கு  நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியுமா? இல்லையா? என்ற கேள்வி சம்பந்தமாக எழுத்து மூல சமர்ப்பனங்களை கொடுக்குமாறு  மேல் நீதிமன்ற நீதிபதி கேட்டுள்ளார்.

 ஆகவே அடுத்த தினத்தில் நாங்கள் எழுத்து மூல சமர்ப்பணங்களை கொடுப்போம். அதன் பிறகு இந்த வழக்கு தொடர்ந்தும் இருக்கமாக இருந்தால் எங்களது முழுமையான ஆட்சேபனைகளை நாங்கள் தெரிவிப்போம். அதிலேயும் வேறு பல ஆட்சேபனைகளையும் எழுப்பவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்  என்று தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாரளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

இந்த வழக்குகள் நேற்றைய தினத்தில் எடுக்கப்பட்டு  வேறு தினங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  அதே வேளையிலே நீதவான் நீதி மன்றத்திலும், மேல் நீதி மன்றத்திலும் நீதிபதிகள் இதனை சுமூகமாக தீர்ப்பதற்கான  வழி முறைகள் இல்லையா என்று வினவி இருக்கிறார்கள்.

 நானும் எதிர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அரச குணரெட்ண அவர்களும்  இதனை சுமூகமாக தீர்ப்பதற்கு எங்களால் இயன்ற முழு முயற்சியையும் எடுப்போம் என்று நீதிபதிகளுக்கு சொல்லியிருக்கிறோம் என்றும்  தெரிவித்தார்.

இந்த வழக்கில்  திருக்கேதீச்சரத்தின் திருப்பணிச்சபை செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன் உற்பட ஏற்கனவே வளைவு அமைப்பதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியினை மன்னார் பிரதேச சபையினர் புதுப்பித்து கொடுத்து அதனை தற்காலிகமாக வளைவு கட்டவிடாமல் இடை நிறுத்தியும் வைத்திருந்த மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் , உறுப்பினர்கள்  , செயலாளர் உட்பட 22 பேரும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.
மீண்டும் இந்த வழக்கானது எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு-மன்னார் மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன்- Reviewed by Author on November 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.