அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபை தவிசாளரின் தான்தோன்றித்தனமான செயல்பாட்டுக்காக நீதிமன்றம் செல்வோம்.

மன்னார் பிரதேச சபை தவிசாளரின் தான்தோன்றித்தனமான செயல்பாட்டுக்காகநீதிமன்றம் செல்வோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெ.கொன்சன் குலாஸ் மன்னார் பிரதேச சபை தவிசாளர் சபையை ஒத்திவைத்து வெளியேறியது அவரின்தான்தோன்றித்தனமானது. ஆகவே இதை எதிர்த்து நீதிகோரி நீதிமன்றம் செல்வோம் என சபையில் எதிர்கட்சி தரப்பிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்
ஜெ.கொன்சன் குலாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

-மன்னார் பிரதேச சபையின் 20 வது அமர்வு நேற்று வியாழக் கிழமை (07) இடம்பெற்றது

இவ் அமர்வின்போது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவை வைக்கப்பட்ட சமயத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி
உறுப்பினர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டதும் இவ் அமர்வு தவிசாளரின் தன்னிச்சையான முடிவில் ஒத்திவைக்கப்பட்டது என தெரிவத்து எதிர் கட்சியைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து பல மணி நேரம் சபைக்குள் அமர்ந்து இருந்தனர்.

இவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெ.கொன்சன் குலாஸ் ஊடகத்துக்கு தனது கருத்தை தெரிவிக்கையில்

மன்னார் பிரதேச சபையின் மாதாந்த இருபதாவது அமர்வு இன்று (நேற்று
07.11.2019) நடைபெற்றது. மொத்தமாக 21 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபையினிலே இவ் அமர்வில் இன்று 20 உறுப்பினர்கள் இவ் அமர்வுக்கு சமூகமளித்திருந்தனர்.

சபைத் தலைவரின் தலைமையில் நிகழ்ச்சி நிரலுடன் நடைபெற்றுக்கொண்டிருந்த இவ் சபையானது நிகழ்ச்சி நிரலில் ஐந்தாவது இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 2020 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு சம்பந்தமாக ஆராயப்பட இருந்தது.

அச்சமயம் தவிசாளரின் தலைமையில் கொண்ட எட்டு பேர் கொண்ட உறுப்பினர்களால் இது குழப்பியடிக்கப்பட்டு தவிசாளர் இவ் சபையை ஒத்திவைத்து வெளிநடப்பு செய்துள்ளார்.

இதை நாங்கள் சட்டத்துக்கு முரணாது என கருதுகின்றோம். உப தவிசாளர் உட்பட நாங்கள் 12 உறுப்பினர்கள் தொடர்ந்து சபைக்குள் அமர்ந்திருக்கின்றோம். இந்த கூட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடாத்துவதற்காகவே இங்கு அமர்ந்திருக்கின்றோம்.

இவ் சம்பவம் சட்டத்துக்கு முரணானதாக இருப்பதால் இதை எங்களால்
ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இது தவிசாளரின் தான்தோன்றித்தனமான செயல்பாடாகும். இப்பொழுது கூட்டம் நடத்தவில்லையென்றால் நாங்கள் தற்பொழுது சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

இன்று இக் கூட்டத்தை தவிசாளர் தொடர்ந்து நடாத்தாவிடின் நாங்கள் நீதிகோரி நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கின்றோம் என்றார்.

காலை 11 மணிக்கு ஆரம்பமான இவ் அமர்வு 12 மணிவரை நடைபெற்றபோதும் 12 மணியளவில் வெளிநடப்பு செய்த ஆளும் கட்சினரைத் தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் 12 பேரும் பிற்பகல் 3 மணிவரை செயல் அமர்வு மண்டபத்துக்குள்ளேயே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரதேச சபை தவிசாளரின் தான்தோன்றித்தனமான செயல்பாட்டுக்காக நீதிமன்றம் செல்வோம். Reviewed by Author on November 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.