அண்மைய செய்திகள்

recent
-

உங்களுக்கு இந்த 10 அறிகுறியும் இருக்கா? உஷார்! சிறுநீரக பாதிப்பாக இருக்குமாம் -


முதுகெலும்பின் இரு பக்கத்திலும் ஒரு சிறுநீரகம் அமைந்துள்ளது சிறுநீரகம். இது சிறுநீர் வழியாக நமது உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது.
அதுமட்டுமின்றி உடம்பில் உள்ள இரத்தத்தை வடிகட்டி கழிவுகளை நீக்குகிறது, நீக்கிய கழிவுகளை சிறுநீர்ப்பைக்கு அனுப்புகிறது.
மேலும் சிறுநீரகங்கள் போதுமான அளவு இரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டும் திறனை இழக்கும் போது சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
இதனை ஒரு சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொண்டாலே போதும் சிறுநீரக பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.
தற்போது அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.
  • உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.
  • சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.
  • சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.
  • மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.
  • ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.
  • சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.
  • பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சனை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும்.
  • சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும். அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.
  • சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இந்த யூரியா எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சுக்காற்றை கெட்ட வாடையாக மாற்றும்.
உங்களுக்கு இந்த 10 அறிகுறியும் இருக்கா? உஷார்! சிறுநீரக பாதிப்பாக இருக்குமாம் - Reviewed by Author on February 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.