அண்மைய செய்திகள்

recent
-

சூரியனில் 200 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. பூமி கடுமையாக குளிர்ச்சி அடைய போகுது.. ரிப்போர்ட்

 சூரிய குறைந்த பட்சம், சூரியன், பூமி, மினி பனி யுகம் ",

  "articleBody":"வாஷிங்டன்: சூரியன் குறைந்தபட்ச நிலையை அடைவதால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பூமி கடுமையாக குளிர்ச்சி அடையப்போகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.விஞ்ஞானிகளின் புதிய அறிக்கையின் படி. ஒரு சூரியனிடம் இருந்து குறைந்த பட்ச வெப்பமே (சூரிய குறைந்த பட்சம்) பூமிக்கு கொஞ்ச காலம் வர உள்ளது, இதன் விளைவாக நமது பூமி குளிர்ந்த காலநிலையையும், அடுத்த 30 ஆண்டுகளுக்கு கடுமையான பனிப்புயலையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுருக்கமாக இதை ஒரு மினி பனி யுகம் என்றும் அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சூரியன் அதன் இயற்கையான உறக்கநிலைக்குள் நுழைகிறது என்றும் இது உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும், மேலும் பூமி முழுவதும் வெப்பநிலை குறையக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய குறைந்தபட்சம் என்பது சூரியன் வழக்கத்தை விட குறைந்த ஆற்றலை அல்லது வெப்பத்தை வெளியிடும் காலமாகும். நாசாவின் அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவாக சூரியன் அதன் மிகக் குறைந்த செயல்பாட்டை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜார்கோவா என்பவரின் அறிக்கையை மேற்கோள் காட்டி தி சன் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில்.  சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் . இது 12 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் ஆனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படும்  சூரியன் உறக்கநிலையை நெருங்குகிறது.

சூரிய மேற்பரப்பில் குறைவான சூரிய புள்ளிகள் உருவாகும், இதனால் குறைந்த ஆற்றலும் கதிர்வீச்சும் கிரகங்கள் மற்றும் பூமியை நோக்கி வெளிப்படும்.. சூரிய குறைந்தபட்சம் குறித்து பல அறிவியல் ஆவணங்களை பேராசிரியர் ஜார்கோவா வெளியிட்டுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  சூரிய குறைந்தபட்சம் ஒவ்வொரு 11 வருடங்களுக்கும் சூரியனின் இயற்கையான வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது.,

இந்த ஆண்டு குறிப்பாக குளிரான சூரிய குறைந்தபட்சத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இந்த நிகழ்வு ஒவ்வொரு 400 வருடங்களுக்கும் நடக்கும். கனடா மற்றும் ஐஸ்லாந்தில் ஏற்பட்ட குளிர்ச்சியை மினி பனியுகத்திற்கு சான்றாக பேராசிரியர் ஜார்கோவா ஏற்கனவே கூறியிருக்கிறார்."

சூரியனில் 200 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. பூமி கடுமையாக குளிர்ச்சி அடைய போகுது.. ரிப்போர்ட் Reviewed by Author on February 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.