மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஆரம்பம்-முதல் சுற்றில் பள்ளிமுனை எப்.சி வெற்றி....படங்கள்
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வும்,முதல் சுற்றுப்போட்டியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மின் ஒழியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.
'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
-முதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இருந்து விருந்தினர்களும்,வீரர்களும் பேன் இசை வாத்தியத்துடன் மன்னார் நகர சபை மண்டபத்தை நோக்கி அழைத்து வரப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுரடி சில்வா,மற்றும் விருந்தினர்களாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிதிக்குழுவின் தலைவரும்,மாவட்ட லீக்குகளின் அபிவிருத்திக் குழு தலைவருமான ஆர்.புகலேந்திரன்,மன்னாரின் உதைபந்தாட்ட தந்தை என அழைக்கப்படும் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லஸ் ஆகியோர் கலந்து கொண்டதோடு அணிகளின் உரிமையாளர்கள் வீரர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் சுற்றுப் போட்டியானது இரவு 8 மணியளவில் மின்னொலியில் பள்ளிமுனை உதைபந்தாட்ட அணிக்கும், பிரதர் ஸ்ரனி ஐக்கிய உதைபந்தாட்ட அணிக்கும் இடையில் இடம் பெற்றது.
இதன் போது பள்ளிமுனை உதைபந்தாட்ட அணியானது 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஆரம்பம்-முதல் சுற்றில் பள்ளிமுனை எப்.சி வெற்றி....படங்கள்
Reviewed by Author
on
February 17, 2020
Rating:

No comments:
Post a Comment