அண்மைய செய்திகள்

recent
-

கலை வளர்ப்பதையும் கலையையும் ஏழ்மையிலும் இழந்து விடாதே! செழுங்கலை வித்தகர் செ.செபஸ்ரியாம் பிள்ளை தேவநாதன்


கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில் மறை சமூக தமிழ் தன்னார்வப்பணியாளருமாகிய செழுங்கலை வித்தகர் செ.செபஸ்ரியாம் பிள்ளை தேவநாதன் அவர்களின் அகத்திலிருந்து….

தங்களைப்பற்றி-
நான் பொன்தீவு கண்டல்  முருங்கன் மன்னாரில் எனது குடும்பத்தினருடன் கலைச்சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.

தங்களுக்கு இசையார்வம் எப்படி உருவானது…
எனது தந்தை ஆர்மோனியா வாத்தியக்கலைஞர் ஆனாலும் கற்றுத்தரவும் இல்லை காட்டித்தரவும் இல்லை ஆனால் எனக்கு டோல் வாசிப்பதில் ஆர்வம் இருந்தது. 1985-1987ல் இந்தியா போனேன் 1990 இரண்டாம் முறை இந்தியா போனேன் அப்போது அங்கு ஒரு ஆர்மோனியம் வாங்கினேன் அந்த முகாமிலேயே ஒரு நாட்டக்கூத்தினை 03முறை மேடையேற்றினேன்.

 நான் இருந்த முகாமில் நாட்டுக்கூத்து பார்க்க 05ரூபா டிக்கற் அப்பாது 05ரூபா பெரிய காசு தெரியுமா…அப்படி இருந்தம் எனக்கும் எனது நாட்டுக்கூத்துக்கும் பெரிய மதிப்பு இருந்தது அதனைத்தொடர்ந்து நாட்டார்பாடல்கள் சிறிய சிறிய நாடகங்கள் நிகழ்ச்சிகள் செய்தேன் அங்கு 600 ரூபாக்கு ஆர்மோனியம் வாங்க நான் பட்டபாடு இருக்கே….

இந்தியாவில் இலங்கை திரும்பியபின்….

1996ல் இலங்கைக்குதிரும்பி வந்திற்றன் அப்போது எனது அப்பா பெரியமடு ஆகுளு இல் வேலை  செய்து கொண்டு இருந்தார் அப்பாவிற்கு தெரியாது நான் ஆர்மோனியம் வாசிப்பன் என்று பார்த்துவிட்டு சந்தோஷப்பட்டார்.
நான் என்னை அறியாமலே இந்தியாவில் இருந்து வரும்போது இசைஞானம் பெற்றுள்ளேன் நான் முறைப்படி இசையை கற்கவில்லை இராகங்கள் தாளங்கள் இது தான் இதுதான் சரி என்று தெரியாது கற்பனையில் தான் பாட்டெழுதி தாளம் இராகம் போடுவேன் அது சரியாக பொருந்தி விடும் இசையமைத்து விடுவேன் இங்கு வந்து கலைஞர் ஒருவரின் நாடகக்கொப்பியினை வாங்கி எழுதி 06முறை மேடையேற்றியுள்ளேன.

 1மணித்தியாலய நாடகங்கள் தான்.ஏன் நானே நாடகங்களை எழுதக்கூடாது என்று நினைத்தேன் அப்பா இருக்கிறார் சந்தேகம் என்றால் அப்பாவிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று இருக்க திடீரென எனது தந்தை இறந்து போனார். எப்படியிருக்கும் என்னால முடியும் என்று நான் முயற்சி செய்யும் வேளையில் இப்படியான சோக சம்பவம் நிகழ்ந்தது. அந்த
துயரசம்பவத்தில் இருந்து மீண்டு வந்து எனது முயற்சியினை கைவிடாமல் எல்லா நாடகங்களையும் படிப்பேன் பார்ப்பேன் நூல்களையம் பைபிளையும் படித்தேன் தொடர்கின்றது இன்னும்.
1996 இல் மீண்டும் இலங்கைக்கு வந்து எமது கிராமத்தில் வருட ஆரம்பங்களிலும் திருவிழாக்காலங்களிலும் கிட்டத்தட்ட 16பாடல்களுக்கு மேல் பழக்கியுள்ளேன் வாத்தியங்களையும் வாசித்துள்ளேன் 1998-2000-2006 காலப்பகுதிகளில் எனலாம் ஆன்மீக நிகழ்வுகளுக்கு பணத்தினை பெரிதாக எதிர்பார்க்க மாட்டேன் தருவதை பெற்றுக்கொள்வேன் கலையானது கலைஞர்களின் திறமையினை வெளிப்படுத்துபவை.

தாங்களின் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டது பற்றி…
பெரிதாக போட்டிகளில் கலந்து கொள்வதில்லை தற்போது தேசிய போட்டிகள் உள்ளுர் போட்டிகள் என கலந்து கொண்டு வருகின்றேன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வைக்கின்ற போட்டிகளில் தொடர்ச்சியாக 04 வருடங்களாக  01 நாட்டார் பாடல்
கிராமிய பாடல் நாடகங்கள் போட்டிகளில் இடத்தினைப்பெற்றுள்ளாம். இவற்றினைதொடர்ச்சியாக ககலந்து கொள்வதற்கு பொருளாதார பிரச்சினையும் உள்ளது அத்துடன் இசைத்துறை சார்ந்து கல்விகற்றலும் குறைவு இருந்தம் இறைவனின் அருளால் இசையமத்து வருகின்றேன்.


பாடல் எழுதும்போது சிரமப்பட்டதுண்டா….

ம்ம்ம் சில தடவைகள் நடந்துள்ளது நான் ஒருமுறை எமது பங்கின் அருட்தந்தை அவர்களுக்கான வாழ்த்துப்பாடல் எழுதினேன் அது முழுமையாவதற்கு மங்களம் எழுத வேண்டும் ஆனால் எழுத வருதில்லை நான் தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போது சட்டென எனக்கு வந்தது இப்படி
திருவும் தேன் மாளிகை சென்றாய்

சிறப்புடனே விரைந்து சென்றாய்
சீரும் சிறப்புடனும் இகமதில்
வாழ்ந்திட தேவனருளை-நாம் வேண்டியே நிற்போம்

வான் மழையோ பொழிந்து
வயல்புலநீர் நிரம்பி
நெல்மணிகள் விளையவும்
நீர் நிரம்பி நெல்மணிகள் விளையவும்
நீளும் எம்பிணி நோய்கள்
அகன்றிடவும் நிரந்தர சமாதானம்
நிறைந்து ஓங்கவும்

இப்படி இன்னும் 03 அடிகளுக்கு மேல் 10நிமிடங்களுக்குள் எழுதி முடித்துவிட்டேன். இப்படி சில நேரங்களில் எழுதி முடித்துவிடுவேன் சில சந்தர்ப்பங்களில் எப்படி எழுதினாலும் வரவே வராது.முதல் 02கட்டும் எழுதி விட்டன் என்டால் மிகுதி 04கட்டும் தாளத்திற்கு ஏற்றால் போல் இலகுவாக எழுதிவிடுவேன்.

தங்களின் இசையாத்தியக்கலைஞாவதற்கு உதவியவர்கள் பற்றி …


எனக்கு யாரும்பெரிதாக உதவியது இல்லை ஒரு சிலரைத்தவிர  திரு.தேவதாசன் அல்மேடா திரு.சிங்கராயர் இசைமாலைத்தாழ்வு பர்வைய பாப்பா சிறிய வழிகாட்டிகளாகவும் எனது தந்தையும் ஆர்மோனிய வாத்தியக்கலைஞராக இருந்தும் பெரிதாக எதையும் கற்றுத்தரவில்லை ஆனாலம் பல கலைஞர்களுடன் பணியாற்றி இருக்கின்றேன.எனக்கு குரு என்று யாரும் இல்லை அப்படியிருந்தும் எனது முயற்சியால் ஆர்மோனியம் ஓர்கன் டோலக் மவுத் ஓர்கன் வாத்தியக்கருவிகளையம் வில்லுப்பாட்டு நாட்டுக்கூத்து நாடகம் பாடல் போன்றவற்றினை எழுதிவருகின்றேன்.

நீண்டநாள் ஆசை எனும் போது….
ஒரு சரித்திர நாடகமாவது எழுதவேண்டும் என்பதே அதுவும் 2மணித்தியாளத்திற்குள் இருக்கவேண்டும் நல்ல சரித்திர நாடகம் ஒன்றை எழுதி நடித்து மேடையேற்றி விடவேண்டும் ஆனாலும் சமூக நாடகம் தற்போதைய சூழலுக்கு தேவையானது. சமூகநாடகம் எனும் போது அது கிராமத்தின் கதை வடிவம் சாயலில் பாஷையும் பேச்சும் இருக்கவேண்டும்.
 அப்போதுதான்  அக்கிராமத்தின் பண்பும் ஒழுக்கமும் இருக்கும் அந்தந்த கிராம பாஷையில் இருக்க இப்ப உள்ள நடிகர்கள் நடிக்க விரும்புவதில்லை
அப்படியிருந்தும் ஆரோக்கியம் மாஸ்ரர் கதையை வேண்டி சமூக பாத்திரத்தினை உருவாக்கி மேடையேற்றினே;அவரம் நல்லா இருக்கு என்று பாராட்டினார் நாட்டுக்கான நல்ல கருத்தினை சொல்ல வேண்டும.

தங்களுக்கு கவலையான விடையம் என்றால்
எனக்கு கவலையை உருவாக்கிய விடையம் என்றால் அது எனது பேத்திகளான 02பேரும் ஆங்கில தினம் தமிழ்தினப்போட்டிகளில் 01ம் இடத்தினை பெற்றது யாழ்ப்பாணத்தில் ஆனாலும் 2016ம்ஆண்டு என நினைக்கின்றேன் திருக்குறள் போட்டி ஒன்றில் கலையுணர்வு இல்லாத பெற்றோர் தங்களது பிள்ளைகள் சுமாhக பாடினாலும் நல்லாய் பாடினாய்என்று வாழ்த்ததல் அதே போன்று கலையுணர்வுள்ள நடுவர்கள் தங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு திறமயில்லாதபோதும் 1ம் இடம் கொடுத்தல் இவ்வாறான செயல் மிகவும் மனவேதனையைத்தரும் செயல் அல்லவா…. நான் ஒரு நிகழ்வை பார்த்தக்கொண்டு இருக்கும் போது தானாகவே கண்ணில் இருந்து கண்ணீர் வரும் அப்படி வந்தால் அந்த நாடகமோ… நிகழ்வோ… சிறப்பானதாக அமையும் அப்படியான நிகழ்வு ஒன்றிற்குதான் இடமே கிடைக்கவில்லை என்றால்…கிராமத்தில்  இருந்து வரும் கலை நிகழ்வுகள் என்றாலும் சரி கலைஞர்கள்  என்றாலும் சரி நகரப்பகுதியில் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பது மட்டும்100வீதம் உண்மை….

மறக்க முடியாத சம்பவம் ஏதும்…
மறக்க முடியாத சம்பவங்கள் பல வுள்ளது அவற்றில் மிகவும் நெஞ்சை தொட்ட விடையம் என்றால் புலவர் சிங்கராயர் அவர்கள் எழுதிய மறை காத்தமன்னன் எனும் நாட்டுக்கூத்தினை இந்தியாவில் முகாமில் இருந்த நேரம் அங்கு 80 குடும்பம் இருந்தது பெரும்பாலான இந்துக்குடும்பங்களே பனங்கட்டுகொட்டு எருக்கலம்பிட்டி மன்னார் மாவட்டத்தில் பலகிராமங்களும் வவனியா மாவட்டத்தில் இருந்து சிலகிராமங்களும் இருந்த வேளை அங்குள்ள அருட்சகோதரிகள் அருட்தந்தயர்களின் துணையுடன் அப்போது எங்கள் முகாமின் அருகில் பால வேலை நடைபெற்றக்கொண்டு இருந்தது இந்திய தமிழ்ர்கள் அந்த பாலவேலைக்கு பயன்படுத்தகின்ற கொங்றீற் தடடுக்களை பயன்படுத்தி சிறப்பான முறையில் மேடை அமைத்து தந்தார்கள்.  நாட்டுக்கூத்தினை தொடங்குவதற்கு முன்னர் அருட்தந்தை தொடக்கிவைக்க பெரியவராக இருந்த திருகோணமலை கலைஞர்ஒருவரை உரயாற்ற சொன்னதும் அந்த கலைஞர உரையாற்றிவிட்டு இறங்கும் போது பெரிய இடியடன் கடும் மழை பெய்தது பிறகு என்ன எல்லோரும் ஓடி முகாமிற்குள் சென்றுவிட்டார்கள்.

சுற்றி ஒரு சனமும் இல்லை எனது வீட்டிற்கு முன்பு பெரிய இயேசுநாதர் படம்  இருந்தது அதன் கீழ் தனியாக இருந்து கத்தி கத்தி அழதேன் 3மாதமாகப்பழகி கஸ்ரப்பட்டு மேடையேற்ற இப்படி செய்கின்றாயே… என்ன தான் நான் தப்பு செய்தேன் சொல்லு சொல்லு இறைவா ஒரு 05 நிமிடம இருக்கம் மழை விட்டது அவ்வளவு சனமும் திரும்பி வந்து விட்டார்கள் மேடையருகில்  மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த நாடகத்தினை  மேடையேற்றினேன் நல்ல வரவேற்பு கிடைத்தது பெரிய நாடகங்கள் மேடையேற்றினால் எமது கிராம வழக்கத்தின் படி 03 நாட்கள் கழித்துதான்  மேடையினை கழற்றவோம் அப்படியே செய்தேன் மறக்கமுடியாதசம்பவம் என்றால் இதுதான் இந்தியா தர்மபுரி மாவட்டம் ஓசுர் கிழவரப்பள்ளி டாம் அங்கு இருந்தவர்கள் அதிகமானவர்கள் இந்துக்கள் அவர்களுடன் 05 முஸ்லீம் குடும்பங்களும் இருந்தது மதங்கள் கடந்து எனக்கு உதவி புரிந்தார்கள் குறிப்பாக டாம் கட்டடிடக்கலைஞர்களும் உதவி புரிந்தார்கள்.

  • 1985-1987 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இறக்கும் போதும் மாண்புமிகு பிரதமர் இந்திராகாந்தி இறக்கும் போதும் இந்தியாவில்தான் இருந்தேன் இதுவும் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றுதான்.

இளைஞர் யுவதிகளுக்கான தங்களின் அனுபவத்தில் இருந்து…..


கலைஞன் என்ற உணர்வு உனக்கு இருந்தால் கலை வளர்ப்பதை கலையை ஏழ்மையிலும் இழந்து விடாதே! கலைக்குள் கல்வி அதிகமாய் இருக்கின்றது. ஆன்மீகமும் எமது பழைமயான பாரம்பரியம் அத்துடன் நாடகம் நாட்டுக்கூத்து இன்னும் பலகலைகள் அழிந்திடா வண்ணம் பாதுகாத்து வளர்க்கவேண்டிய பொறுப்ப எமது இளம் தலைமுறையினரின் கையில் தான் உள்ளது.

தற்காலத்தில் அழிந்துவரும் கலையை எப்படி காப்பது…
எமது கிராமத்தில் உள்ள அத்தனைஅமைப்புக்களையும் மக்களையும் ஒன்று சேர்த்து மிகவும் ஆர்வம் உள்ளவர்களை பழக்கி ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டால் எமது கலையானது எழச்சிப்பாதையில் செல்லும் என்றுமே அழியாது.

மூத்த கலைஞர்கள் இளம்கலைஞர்கள் மதிப்பதில்லை கலைஞர்களை கௌரவிப்பதும் இல்லை என்ற கருத்துப்பற்றி….

தற்போதைய சு10ழலில் இளையோர் பெற்றோர்களை பெரியோர்களை ஆசிரியர்களை இவர்கiளேமதிப்பது குறைவாக இருக்கும் போது எப்படி கலைஞர்களுக்கு மதிப்பு இருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. கலைஞர் கௌரவிப்பது எனும் போது அதுவும் ஒரே கலைஞரையே தினம் எல்லா நிகழ்வுகளிலும் கௌரவிப்பதுதான் தற்போதைய நிலைமையாக உள்ளது.
அந்த கலைஞர் நிறைய சேவையாற்றியுள்ளார் அவரிடம் திறமையுள்ளது என்றாலும் அவருக்கே கௌரவிப்பது நல்லசெயலாக இருக்காது ஏனைய கலைஞர்களின் சந்தர்ப்பங்களும் தடைப்படுகின்றது அல்லவா

தங்களின் சேவைகளுக்கு பாராட்டி கௌரவித்த விருதுகள் பற்றி---
இலக்கியவாதிகளை வாழும்போதே வாழ்த்துகின்ற கௌரவிக்கின்றது சிறப்பான விடையம் தான்
  • தர்ம பிரபஷ்வரா கத்தோலிக்க தேசிய விருது-06-12-2018 இலங்கை கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சு-இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம்.
  • 21-11-2019 அன்று செழுங்கலை வித்தகர் எனும் விருதினை நானாட்டான் பிரதேச செயலகத்தினால்  கலாசாரவிழாவில் வைத்து வழங்கப்பட்டது.
  • பொன்தீவு கண்டல் செந்தமிழ் கலாமன்ற உறுப்பினர். பல அமைப்புகள் பாராட்டி பொன்னாடைபோர்த்தி கௌரவப்படுத்தி உள்ளார்கள் அதற்கான சன்றுப்பொருட்கள் தற்போது கைவசம் இல்லை

மன்னார் மண்ணின் பெருமையை 10 வருடங்கள் கடந்தும்  வெளிப்படுதிவரும் நியூமன்னார் இணையம் பற்றி…

நியூமன்னார் இணையம் மன்னாரில் நல்ல செயற்பாடுகளை செய்து வருகின்றது நான் எனது இத்தனை வருட கலைச்சேவையினை செய்துள்ளேன் ஆனாலும் என்னை வீட்டுக்கு வந்து எனது ஆவணங்களை பார்வையிட்டு யாரும் செவ்வி கண்டதில்லை முதல் தடவையாக நியூமன்னார் இணையத்தில் இருந்து வை.கஜேந்திரனாகிய நீங்கள்  செவ்வி கண்டுள்ளீர்கள் இது உண்மையில் எனக்கு பெரிய மகிழ்ச்சியான விடையம்தான் என்னை எத்தனையோ பேருக்கு தெரிந்து இருந்தாலும் இணையத்தின்மூலம்வெளிக்கொணர்வது மட்டற்றமகிழ்ச்சியே நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்என்றும்.

நியூமன்னார் இணையக்குழுமத்திற்காக சந்திப்பு—
கலைச்செம்மல் கவிஞர் வை.கஜேந்திரன்-BA




















கலை வளர்ப்பதையும் கலையையும் ஏழ்மையிலும் இழந்து விடாதே! செழுங்கலை வித்தகர் செ.செபஸ்ரியாம் பிள்ளை தேவநாதன் Reviewed by Author on February 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.