அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்திற்கு தீயணைப்புபிரிவினை கொண்டு வர புதிய வழியில் புறப்பட்ட இளைஞர்கள்

மன்னார் மாவட்டத்திற்கு இவ்வளவு காலமாக இல்லாமல் இருக்கின்ற விடையங்களில் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுகின்ற தீயணைப்புபிரிவினை கொண்டுவருதற்கான முயற்சியில் எமது இளைஞர்கள் இறங்கியுள்ளார்கள்.
ஆம்....... இவ்வளவு காலமாக அரசியல் பேசுகின்ற அரசியல் நடத்துகின்ற அரசியல் வாதிகளான பாராளுமன்றஉறுப்பினர்கள் கபினட் அமைச்சர் என பெரும்பட்டாளமே சும்மா பொழுதினைக்கழித்து விட்டு வீட்டிற்குள் குந்தியிருக்கினம் அடுத்த தேர்தலுக்கான வியாகியானங்களை தயார் செய்துகொண்டு...... அதிலும் எமது மன்னார் மாவட்டத்திற்கு தேவையான எந்தவொரு திட்டமும் இருக்காது என்பது தான் உண்மை……

இவர்களை நம்பி ஓட்டுப்பொட்டு விட்டு நடு ரோட்டில் நின்று தான் நமது தேவைகளையம் உரிமைகளையும் கேக்கவேண்டி இருக்கின்றது.
சரி விடையத்திற்கு வருவோம் மன்னார் மாவட்டத்திற்கு தீயணைப்பு பிரிவு தேவையென்று நீண்டகாலமாக குரல் கொடுத்து கொண்டு இருக்கும் மக்களும் சில நலன் சார் அமைப்புக்களும் ஆனாலும் எந்தவிதமான நல்ல தீர்வும் கிடைக்கவில்லை இதுவரை ஏன்……!!!

கடந்த சில வருடங்களுக்குள் 10ற்கும் மேற்பட்ட பாரிய தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது அது பெரும் பொருள்சேதத்தினையும் பண அழிவையும் தான் தந்துள்ளது. 

சமீபத்தில் ஒரு தனியார் வைத்தியசாலை எரிந்து நாசமாகியுள்ளது தீபற்றியவுடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மற்றும் கடற்படையினர் மற்றும் நகரசபை தண்ணீர் பவுசர் வந்தும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையாதலால்  தனியார் வைத்தியசாலை ஆனது எரிந்து நாசமாகியது.

இதேவேளை தீயணைப்பு பிரிவு இருந்திருந்தால் அந்த தீ விபத்தினை முற்றுமுழுதாக தடுத்திருக்கலாம் என்பதுதான் வெளிப்படையான கருத்து ஆகும்.

இனிவருகின்ற காலங்களிலாவது இவ்வாறான பாரிய தீயனர்த்தங்கள் நிகழாமல் இருக்கவும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருக்கவும்   எமது மாவட்ட இளைஞர்கள் முகநூல் வழியாகவும் நேரடியாகவும் எடுத்திருக்கின்ற பெரும் முயற்சிக்கு நியூமன்னார் இணையமானது முழுமையான ஆதரவினை வழங்கும.

இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயல்திறன்.....வெற்றியளிக்க  அனைவரும் ஒன்றிணைவோம்.

#We_need_a_fire_brigade_in_Mannar

மன்னார் மாவட்டத்திற்கான ஓர் நிரந்தர தீயணைப்பு பிரிவு வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து
எம்மால் இதுதொடர்பில் செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகள்,
1) Facebook frame  ஊடாக இதை ஒருமித்த மக்கள் கோரிக்கையாக வெளிக்கொணர்ந்தது
2) Google form ஊடாக இக்கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் மக்களின் தரவுகளை சேகரித்து கோரிக்கை மனுவொன்றை அரசிற்கு அனுப்ப தயார்செய்து வருகிறோம்.
3) இந்த பிரச்சனை தொடர்பாக மன்னார் நகரசபை ஊடாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனுப்பப்பட்ட கடிதங்களின் தரவுகளை நகரசபை தவிசாளரை சந்தித்து பெற்றுகொண்டுள்ளோம்.
4) Dஸ் ஒffஇcஎ இல் பதிவு செய்யப்பட்டுள்ள இதுவரையான தீவிபத்துக்கள் இடம்பெற்ற இடங்களின் பட்டியலை பெற்றுள்ளோம்.
ஆனால் தீவிபத்தின் புகைப்படங்களும் சேத விபரங்களும் கிடைக்காத படியால் அவற்றை தனிப்பட்ட முறையில் சேகரித்து வருகின்றோம்.

 இப்பணியில் ......
"மன்னாரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக எமது ஊடகம் என்றும் செயற்படும்."
ஆசிரியர் பீடம்
நியூமன்னார் இணையகுழுமம்.மன்னார் மாவட்டத்திற்கு தீயணைப்புபிரிவினை கொண்டு வர புதிய வழியில் புறப்பட்ட இளைஞர்கள் Reviewed by Author on May 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.