அண்மைய செய்திகள்

recent
-

கரும்புலி நாளை குறிக்கும் பதாகையுடன் கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம்...

கிளிநொச்சி – பளை, இயக்கச்சியில் நேற்று முன் தினம் (03) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் 3, கரும்புலி நாளை குறிக்கும் பதாகை ஒன்றும், வெடிப் பொருட்கள் சிலவும், முன்னாள் போராளி ஒருவரின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றுடன் ஆசிரியை ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த ஆசிரியையின் வீட்டில் கடந்த 3 ஆம் திகதி வெடிச் சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் அதில் ஆசிரியையின் கணவரே காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கிளிநொச்சி பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்...

காயமடைந்த ஆசிரியை 43 வயதானவர் எனவும் இவர் இயக்கச்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிப் புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு வெடிப் பொருட்களை தயாரித்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிய பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கும் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கரும்புலி நாளை குறிக்கும் பதாகையுடன் கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம்... Reviewed by Author on July 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.