அண்மைய செய்திகள்

recent
-

850 கிலோவுக்கும் அதிகமான சுறா மீன்களுடன் மீனவர்கள் கைது

 சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 850 கிலோ கிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (06) அதிகாலை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நெடுநாள் மீன்பிடிப் படகொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சுறா மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.




கடலோர பாதுகாப்புப் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட சுறா மீன்கள் மற்றும் மீன்பிடிப் படகுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லமன்கர மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்





850 கிலோவுக்கும் அதிகமான சுறா மீன்களுடன் மீனவர்கள் கைது Reviewed by Vijithan on January 06, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.