யாழ்.மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது...!!!
2ம் இணைப்பு
1ம் இணைப்பு
யாழ்ப்பாணம் – பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மன்னார் பேசாலை தேவாலயத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய அதே நபரே இன்று யாழ் பெரிய கோவிலிலும் நடமாடித்திரிந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த ஆலயத்திற்கு இன்று நண்பகல் 12.30 மணியளவில் வந்த குறித்த நபர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் மிக நீண்ட நேரம் தனது உடமைகளுடன் நடமாடித்திரிந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரை கைது செய்து தற்போது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்..
யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் வைத்து இன்று (06) மதியம் கைது செய்யப்பட்டவர் மன்னார் – வங்காலையைச் சேர்ந்த அலோசியஸ் ஸ்ரீபவன் வாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது மனநிலை தொடர்பில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
“சந்தேக நபர் இன்று காலை சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அருட்தந்தை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத் தேடியுள்ளார்.
அதன்பின்னர் யாழ்ப்பாணம் பெரிய கோவிலுக்கு இன்று மதியம் வந்துள்ளார். சந்தேக நபர் இந்தியாவிலும் சில மாதங்கள் இருந்துள்ளார்.
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவர் வருகை தந்ததன் நோக்கம் தெரியவில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன” என்றும் பொலிஸார் கூறினர்.
-----------------1ம் இணைப்பு
யாழ்ப்பாணம் – பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மன்னார் பேசாலை தேவாலயத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய அதே நபரே இன்று யாழ் பெரிய கோவிலிலும் நடமாடித்திரிந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த ஆலயத்திற்கு இன்று நண்பகல் 12.30 மணியளவில் வந்த குறித்த நபர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் மிக நீண்ட நேரம் தனது உடமைகளுடன் நடமாடித்திரிந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரை கைது செய்து தற்போது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்..
யாழ்.மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது...!!!
Reviewed by Author
on
July 06, 2020
Rating:

No comments:
Post a Comment