அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாட்டில் ஒரேநாளில் ஆறாயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறாயிரத்து 352 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 15ஆயிரத்து 749ஆக பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றினால் இன்று (சனிக்கிழமை) 87பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஏழாயிரத்து 137ஆக உயர்ந்துள்ளன.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 173 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழகம் முழுவதும் ஆறாயிரத்து 45 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 55ஆயிரத்து 727ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகபட்சமாக 80 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 44 இலட்சத்து 99 ஆயிரத்து 670ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் ஒரேநாளில் ஆறாயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு! Reviewed by Author on August 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.