கிளிநொச்சி விபத்தில் விஷேட அதிரடிப்படையினர் ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் படுகாயம்!
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஏ-9 வீதி, 155ஆம் கட்டைப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நகர்ப் பகுதியில் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் 155ஆம் கட்டை சந்திப் பகுதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி திரும்பும் வேளையில் விசேட அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நகர்ப் பகுதியில் இருந்து வந்த டிப்பர் வாகன சாரதியின் அசமந்தப்போக்கே விபத்துக்கு காரணம் எனவும் குறித்த சாரதி வாகனத்தை திருப்பியபோது விசேட அதிரடிப்படையினர் சென்ற மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்தமுடியாமல் பாரதிபுரம் பக்கம் திருப்பிய டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதுடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் விசேட அதிரடிப்படையினரி மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளது.
இந்த விபத்தில் படிநெகுடுவாவ, மயில்கஸ்வெவவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தனபாலகே ரோஷன் பிரதீப் (32 வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றையவர் படுகாயங்களுடன் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments:
Post a Comment