தசாப்தத்தின் சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு
இதில் இந்த தசாப்தத்தின் சிறந்த வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தசாப்தத்தின் சிறந்த ஒரு நாள் போட்டி வீரருக்கான விருதையும் விராட் வென்றுள்ளார்.
தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் வீரராக ஸ்டீவ் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் 20 ஓவர் போட்டிகளில் சிறந்த அறிமுக வீரராக ரஷீத் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் அறத்துடன் விளையாடிய விருதுக்கு தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில், ரன் அவுட்டான இயான் பெல்லை திரும்ப பேட்டிங் செய்ய அழைத்ததற்காக இந்த விருதுக்கு தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டில், கடந்த தசாப்தத்தின் சிறந்த வீராங்கனை, சிறந்த ஒருநாள் மற்றும் இருபது ஓவர் வீராங்கனை ஆகிய மூன்று விருதுகளையும் அவுஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி வென்று சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் அவர்கள் என்றுமே மறக்க முடியாத நினைவு பரிசை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. இதற்காக மும்பையில் உள்ள கல்ச்சர் ஷாப் மற்றும் ஓவிய கலைஞர் பிரதாப் சால்கேவுடன் இணைந்து இந்த விருதுகளுக்கு ஐசிசி வடிவம் கொடுத்துள்ளது.
தசாப்தத்தின் சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு
Reviewed by Author
on
December 28, 2020
Rating:
Reviewed by Author
on
December 28, 2020
Rating:


No comments:
Post a Comment