முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் துறையின் அவசர அறிவிப்பு!
இவர்கள் தற்போது நாட்டில் உள்ள நடைமுறைகளுக்கு அமைய வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்தாலும் தனிமைப்படுத்தல் செயற்ப்பாடின்றி நேரடியாக கடமையாற்றிவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் துறையினர் இவர்களில் 10 பேருக்கு எழுமாறாக பி சிஆர் பரிசோதனைகள் செய்த வேளையிலேயே அவர்களிடமிருந்து 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையிலே குறித்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சாதாரண பணியாற்றினார் ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும்கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனூடாக புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் முகாமைத்துவ ஊழியர்கள் மாத்திரமன்றி பணியாளர்களுக்கும் கொரோனா பரவியுள்ள ஒரு நிலைமை உருவாகியுள்ளது.
நாட்டின் தற்போதைய நடைமுறைக்கு அமைவாக குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் 2500 ஊழியர்களுக்கும் உடனடியாக பி சி ஆர் பரிசோதனை செய்கின்ற நடைமுறை சாத்தியமற்ற நிலை காணப்படுகின்ற நிலையில் அவர்களின் நேரடித் தொடர்புகளை பேணியவர்களின் அடிப்படையிலேயே அவர்களிடம் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே இந்த ஆடை தொழிற்சாலையில் தொடர்புடையவர்கள் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பேணுவதோடு கொரோனா தொற்று அறிகுறிகள் அவர்களிடம் காணப்பட்டால் அவர்கள் உடனடியாக சுகாதாரப் பிரிவினர் நாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே மாவட்டத்தை காப்பாற்றலாம் பொறுப்புடன் செயற்படுவோம்.
நான் மற்றவர்களுக்கு கொரோனாவை பரப்புபவராக இருக்க மாட்டான் என உறுதி பூணுவோம்.
சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிப்போம்.
முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் துறையின் அவசர அறிவிப்பு!
Reviewed by Author
on
May 12, 2021
Rating:
Reviewed by Author
on
May 12, 2021
Rating:


No comments:
Post a Comment