அண்மைய செய்திகள்

recent
-

மூங்கிலாறு சிறுமியின் மரணம் - கைதான சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலை

முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அன்று பாழடைந்த வளவில் சடலமாக மீட்கப்பட்ட 13 வயதுச் சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று(20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குறித்த சிறுமியின் 32 வயதான உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். 

யோகராசா நிதர்ஷனா (வயது-13) என்ற சிறுமியே நேற்று முன்தினம் (18) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். திருகோணமலைக்கு இவரது குடும்ப அங்கத்தவர்கள் சென்றிருந்த நிலையில் தாயாருடன் தனிமையில் வீட்டில் இருந்த சிறுமி அருகில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களை நிறுத்த சென்ற சமயத்தில் கடந்த 15 ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளதாக இவரது தாயாரால் கடந்த 15 ஆம் திகதி பகல் 2 மணிக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. ,திருகோணமலையில் உள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற சிறுமி , கடந்த ஜூலை மாதம் வீடு திரும்பியிருந்தார். 

அதன் பின்னர் அவர் வீட்டிலேயே குடும்பத்தினருடன் வசித்து வந்திருந்தார். காணாமல் போயிருந்த சிறுமி தனது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் உள்ள பாழடைந்த வளவின் பற்றைக் காணி ஒன்றில் நேற்று முன்தினம் 18ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடற்கூற்றுப் பரிசோதனை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றதோடு சம்பவம் தொடர்பில் அவரது உறவினர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட் டுள்ளமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக் கின்றனர்.

மூங்கிலாறு சிறுமியின் மரணம் - கைதான சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலை Reviewed by Author on December 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.