அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படுகின்றது நாடு? – ஆராய்கின்றது அரசாங்கம் – இரகசியத்தகவலை வெளியிட்ட இராணுவத்தளபதி?

இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால் இதுகுறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை சுகாதார கட்டுப்பாடுகளுடன் முடக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே ஒமிக்ரொன் வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

 குறிப்பாக இலங்கையில் நாள் ஒன்றுக்கு 700 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதேபோன்று 15 முதல் 20 வரையான கொரோனா மரணங்களும் பதிவாகி வருகின்றன என்பதுக் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, எதிர்வரும் காலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுலிலுள்ள காலப்பகுதியிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன் ஊடாக இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அதாவது நாடு இரண்டு வாராங்களுக்கு முடக்கப்படவுள்ளது என்பதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார் என்றே பார்க்கப்படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படுகின்றது நாடு? – ஆராய்கின்றது அரசாங்கம் – இரகசியத்தகவலை வெளியிட்ட இராணுவத்தளபதி? Reviewed by Author on December 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.