அண்மைய செய்திகள்

recent
-

IPL: 10.75 கோடி இந்திய ரூபாவிற்கு ஏலம் போன வனிந்து ஹசரங்க

இவ்வாண்டு நடைபெறவுள்ள IPL போட்டிகளுக்கான ஏலத்தில் இலங்கையின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவை 10.75 கோடி இந்திய ரூபாவிற்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி வாங்கியுள்ளது. IPL போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் இன்று (12) பெங்களூரில் நடைபெற்று வருகிறது. வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் எடுக்க ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையில் கடும் போட்டி நிலவியது. ஏலம் விட்டுக்கொண்டிருந்த Hugh Edmeades, உயர் இரத்த அழுத்தம் காரணமாக தரையில் மயங்கி வீழ்ந்த நிலையில், சிறிது நேரத்தின் பின்னர் Charu Sharma தலைமையில் மீண்டும் ஏல நடவடிக்கை ஆரம்பமானது. 

 ஏலத்தில் இடையூறு ஏற்படுவதற்கு முன்னர் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியால் வனிந்து ஹசரங்கவிற்கு 10.75 கோடி இந்திய ரூபா அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏலம் மீண்டும் ஆரம்பித்த பின்னர் அதே தொகைக்கு அவர் வாங்கப்பட்டார். இவர் கடந்த ஆண்டும் RCB அணிக்காக விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹசரங்க முதலிடத்தில் உள்ளார். இதனிடையே பஞ்சாப் கிங்ஸ் அணியால் ககிசோ ரபாடா 9.25 கோடி இந்திய ரூபாவிற்கும் ஸ்ரேயாஸ் ஐயர் 12. 25 கோடி இந்திய ரூபாவிற்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டனர். 

 மும்பை இந்தியன்ஸ் அணியால் இஷான் கிஷான் 15. 25 கோடி இந்திய ரூபாவிற்கு வாங்கப்பட்டார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை 5 கோடி இந்திய ரூபாவிற்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. பெட் கம்மின்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸினால் 7.25 கோடி இந்திய ரூபாவிற்கு வாங்கப்பட்டார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் ட்ரென்ட் போல்ட் 08 கோடி இந்திய ரூபாவிற்கு வாங்கப்பட்டதுடன் Lucknow Super Giants அணியால் 8 . 25 கோடி இந்திய ரூபாவிற்கு Krunal Pandya ஏலத்தில் எடுக்கப்பட்டார். 

 தமிழக வீரர்களான Washington Sundar மற்றும் நடராஜனை Sunrisers Hyderabad அணி ஏலத்தில் எடுத்தது. வொஷிங்டன் சுந்தர் 8.75 கோடி இந்திய ரூபாவிற்கும் நடராஜன் 4 கோடி இந்திய ரூபாவிற்கும் வாங்கப்பட்டனர். Delhi Capitals அணியால் David Warner 6 . 25 கோடி இந்திய ரூபாவிற்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். எவ்வாறாயினும், Mohammad Nabi, Shakib Al Hasan, Steven Smith, Suresh Raina, David Miller மற்றும் Matthew Wade ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை.

IPL: 10.75 கோடி இந்திய ரூபாவிற்கு ஏலம் போன வனிந்து ஹசரங்க Reviewed by Author on February 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.