வரலாற்றில் முதன்முறையாக இ.போ.ச.வில் பெண் நடத்துனர்கள்!
வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் (லங்கம) பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
வெகுஜன ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
வரலாற்றில் முதன்முறையாக இ.போ.ச.வில் பெண் நடத்துனர்கள்!
Reviewed by Vijithan
on
February 06, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 06, 2026
Rating:


No comments:
Post a Comment