இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு
ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் சுரங்கம் தோண்டும் பணி நடந்தது. பின்னர் அந்த சுரங்கம் வழியே சிறுவன் சிக்கி இருந்த இடத்திற்கு டிரில் மிஷன் மூலம் துளை போட்டு மீட்பு படையினர் சென்றனர். முன்னதாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பிய மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிறுவனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மீட்பு பணியை ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டன. மொத்தம் ஐநூறு பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனையடுத்து 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் ராகுல் ஷாஹுவை உயிருடன் மீட்ட மீட்பு படையினர், சுரங்கம் வழியே வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக அந்த சிறுவன் பிலாஸ்பூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு
Reviewed by Author
on
June 15, 2022
Rating:
Reviewed by Author
on
June 15, 2022
Rating:


No comments:
Post a Comment