அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் : மறைந்திருந்து வீடியோ எடுத்த நண்பர்கள் மூன்று பேர் கைது !

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை அவளது காதலன் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டிருந்தபோது அதனை அவனின் நண்பர்கள் ஒளிந்திருந்து வீடியோ எடுத்து சிறுமியை உடல் உறவுக்கு வருமாறு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய அவளது காதலன் மற்றும் நண்பர்கள் உட்பட 3 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (4) கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயது சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் காதலன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவனது வீட்டில் யாரும் இல்லாத போது காதலியை கூட்டிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளும் போது அதனை அவனின் நண்பர்கள் 3 பேர் ஒளிந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்.

 இதனை தொடர்ந்து குறித்த சிறுமியின் காதலனின் நண்பர்கள் சிறுமியை தொடர்பு கொண்டு நீயும் உனது காதலனும் உடல் உறவு மேற்கொண்ட வீடியோ சிடி வடிவில் இருப்பதாகவும் நீ எங்களுடன் உடல் உறவு கொள்ள வருமாறும் இல்லாவிடில் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 இதனையடுத்து சிறுமியின் 16 வயது காதலன் மற்றும் அவனது 16 வயதுடைய நண்பர்கள் உட்பட 3 பேரை கைது செய்ததுடன். சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஒருவர் தலை மறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் : மறைந்திருந்து வீடியோ எடுத்த நண்பர்கள் மூன்று பேர் கைது ! Reviewed by Author on December 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.