அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் பராமரிப்பின்றி காணப்படும் காணிகள் தொடர்பாக மன்னார் மாவட்ட அரச அதிபரின் முக்கிய அறிவித்தல்.

மன்னார்    மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பராமரிப்பின்றி காணப்படும் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை துப்பரவு செய்து  சுகாதார துறையினருக்கு உதவி புரிய வேண்டும். அவ்வாறு உதவி செய்ய முன் வராவிட்டால்  காணி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட அரச அதிபர்  திருமதி அ.ஸ்ரான்லி டி மெல்  தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம்  தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடன் நேற்று  (22) மாலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார் 

இந்த விடயம் தொடர்பாக அந்த கூட்டத்தில் மேலும் தெரிவிக்கையில்,,, 

 நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து சென்று கொண்டிருக்கையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான அதாவது 5 மாதங்கள்  முடிவடைந்த நிலையில் 61 நோயாளர்கள் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதனைத் தொடர்ந்து டெங்கு நுளம்புகளின் ஆய்வுகளின் அடிப்படையில் நோயாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்களின் அடிப்படையிலும் மன்னார் பிரதேசத்தில்  எமில் நகர், பெரியகமம், உப்புக்குளம், மூர் வீதி, போன்ற இடங்கள் அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டு இவற்றுக்கான  கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 25, 26 ,27, ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்பட இருக்கிறது.

இதேவேளை தனியார் காணிகள் பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டு அது தொடர்பாக இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் காணி உரிமையாளர்களை சில வேளைகளில் கண்டு பிடிப்பதில் கடினமாக இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்கள். 

ஆகவே காணி உரிமையாளர்கள் இவ்வாறு வெற்றிடமாக காணப்படுகின்ற காணிகளை தூய்மைப் படுத்தி டெங்கு பரவலை தடுப்பதற்கு எமக்கு உதவ முன்வர வேண்டும்.

  அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக  தீர்மானித்துள்ளதாக   மன்னார் மாவட்ட அரச அதிபர்  திருமதி ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.






மன்னார் மாவட்டத்தில் பராமரிப்பின்றி காணப்படும் காணிகள் தொடர்பாக மன்னார் மாவட்ட அரச அதிபரின் முக்கிய அறிவித்தல். Reviewed by NEWMANNAR on May 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.