திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ த்திற்கு 40 வருடங்களுக்கு பின் யாழில் இருந்து கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா வுக்காக 40 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை(23) எடுத்து வரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை மன்னார் வேட்டையார் முறிப்பு அம்மன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டதன் அதற்கான பூசை வழிபாடுகள் இடம் பெற்ற பின்னர் பாரம் பரிய முறைப்படி மாட்டு வண்டிலில் கொடிச் சீலை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து வரப்பட்டுள்ளது.
எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை ஆனது திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் மற்றும் ஆலய நிர்வாக சபையினரிடமும் கொடிச் சீலை உபய காரர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை புதன் கிழமை(24) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளர்.
1982 ம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு கொடிச்சீலை வழங்கப்பட்ட நிலையில் யுத்த காலத்தில் இந்த முறை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் திருக்கேதீஸ்வரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கி வைக்கப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
May 23, 2023
Rating:













No comments:
Post a Comment