அண்மைய செய்திகள்

recent
-

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபசார விடுதிகள்..! கொத்தோடு சிக்கிய கும்பல்!

 கடுவெல நகரில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபசார விடுதிகளாகச் செயற்பட்ட 4 இடங்கள் சுற்றிவளைக்கபப்ட்டு 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பில் 12 பெண்கள் உட்பட 16 பேரைக் கைது செய்ததாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கடுவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வீரசிங்கவின் பணிப்புரையின் பேரில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட அனுமதியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பெண்களும், விடுதிகளின் முகாமையாளர்களாக பணியாற்றிய நான்கு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கிரிதிவெல, பலாங்கொட, ஹங் வெல்ல, பியகம, பொலன்னறுவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

அதோடு இவர்களில் திருமணமான பெண்களும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்கள் கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபசார விடுதிகள்..! கொத்தோடு சிக்கிய கும்பல்! Reviewed by Author on June 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.