அண்மைய செய்திகள்

recent
-

மடு கல்வி வலையத்திற்கு உட்பட்ட கள்ளியடி பாடசாலையின் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் மடு கல்வி பணிப்பாளர் திருமதி.அ.கி.வொலன்ட்ரைன்

  மடுக்கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் நடப்பது என்ன?

தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்ததன் நோக்கம் என்ன? கள்ளியடி பாடசாலையில் கடமையாற்றிய அதிபரை இடமாற்றம் செய்து கள்ளியடி பாடசாலையில் அதிபர் இல்லாத நிலையை உருவாக்கியதன் காரணம் என்ன? தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இல்லாமை கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்கிறார்கள் இதற்குக் காரணம் மடு வலய கல்வி பணிப்பாளர் உடைய அசண்ட ஈனப் போக்கையும் அவருடைய செயல் திறனின் தன்மையும் காட்டுகின்றது




   மன்னார் மடு கல்வி வலையத்திற்கு உட்பட்ட கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக முழு விபரம்

  1.   திருமதி.தஸ்ப்பீறுகா முகம்மது மிப்லால் 26.07.2022 மன்/கள்ளியடி அ/த/க பாடசாலையிலிருந்து இணைப்பில் சென்றுள்ளார்
  2.  திருமதி.பாத்திமா நஸ்ரின் முகம்மது அஸார்  05.10.2023 மன்/கள்ளியடி அ.த.க பாடசாலையிலிருந்து இணைப்பில் சென்றுள்ளார்.

இங்கு இணைப்பில் இடம் மாற்றம் செய்வது என்பது கள்ளியடி பாடசாலையில் இருந்து குறித்த ஆசிரியர்களுக்கு சம்பளம், மற்றும் நியமன பாடசாலையில் காணப்படும் அனைத்து பதிவுகளும் காணப்படும் ஆனால் அந்த குறித்த ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளில் தங்களுடைய பணிகளை புரிவார்கள் இதுவே அந்த இணைப்பின் கருத்தாகும்.


இவ்விருவரது இணைப்பு தொடர்பாகவும் கள்ளியடி  பாடசாலையின் நிலை தொடர்பாகவும் 10.10.2023 அன்று வலயம் கோட்டம் மாகாணத்திற்கு பாடசாலை அபிவிருத்தி சபையால் மனு அனுப்பி வைக்கப்பட்டது.


இதற்கு பதிலாக 16 .10 .2023 அன்று NP /20/42/(2)/1/S.DO/ 19 கடிதத்திற்கு அமைவாக 01.01.2024  மன்/கள்ளியடி அ.த.க பாடசாலையில் கடமையை மீண்டும் பொறுப்பேற்கும் படி திருமதி.தஸ்பீறுகா முகம்மது மிப்லால் அவர்களிற்கு இணைப்பினை முடிவுறுத்தல் செய்யும் கடிதமும்

 27 .01.2023 அன்று NP/20/42(2)/1/S.DO/18 இலக்க கடிதத்திற்கு அமைவாக 01/01/2024 திகதி மீண்டும் மன்/கள்ளியடி பாடசாலையில் கடமையை பொறுப்பேற்கும் படியாக திருமதி பாத்திமா நஸ்ரின் முகம்மது அசார் அவர்களுக்கு இணைப்பை முடிவுறுத்தல் செய்யும் கடிதமும் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் வலயக்கல்வி பணிப்பாளர் அனுமதியுடன் 22/11/2023 NP/20/42(2)/1/S.DO/18 இலக்க கடிதத்தின் பிரகாரம் திருமதி .தஸ்பீஹா முகம்மது மிப்லால் இணைப்பு மீண்டும் நீடிக்கப்பட்டு கள்ளியடி பாடசாலைக்கு கடிதம் அனுப்பி  வைக்கப்பட்டது


இந் நிலையில் கள்ளியடி அரசினர் தமிழ் கலவன்  பாடசாலைக்கு அதிபர் கூட இல்லை அத்தோடு இரு ஆசிரியரின் இடைவெளியை பூர்த்தி செய்ய எந்தவித ஏற்பாடும் மடு  வலயம் செய்யவில்லை


இந் நிலையில் 08/012024 அன்று NP/20/42(2)/1/TR -CO 2021 /2022 இலக்க கடிதத்தின் பிரகாரம் திருமதி மகேந்திரன் கௌசல்யா ஆசிரியர் புதிதாக நியமனம் பெற்று வந்தார் அவரும் வந்தவுடன் எம் பாடசாலையில் கையொப்பம் இட்டவுடன் இணைப்பில் செல்லும் அனுமதியும் மடு கல்வி பணிப்பாளர் திருமதி.அ.கி.வொலன்ட்ரைன் இடம் பெற்று வந்தார் 

மன்னார் மடு கல்வி வலயத்துக்கு உட்பட   பாடசையில் அதிபர் இல்லாத காரணத்தினால் முதலில் கையொப்பம் இடுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது

இருந்தபோதிலும் வலயக்கல்வி பணிப்பாளரின் தொலைபேசி உரையாடல் மூலம் வலுக்கடடாயமாக கையொப்பம் வைக்கும்படி வலியுறுத்தினார்.

அதன் பின்னரே எம் பாடசாலையில் 05 .01.2024 இல் கையொப்பம் இட அனுமதி வழங்கப்பட்டது


தற்போது எமது பாடசாலையில் 3 ஆசிரியர்களே உள்ளார்கள் இவர்களுள் திருமதி.ஜெகதீஷ் லெம்பேட் யூயின் அனற் 23 /03/ 2024 திகதியுடன் எம் பாடசாலையில் இருந்து மகப்பேற்று விடுமுறையில் செல்வதால் இப் பாடசாலையில் இரு ஆசிரியர்களே உள்ளனர்

இந் நிலையில் பாடசாலை கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்வது எப்படி?

5 வருடங்களாக100  வீதம் சித்தியில் துலக்கிய பாடசாலை வீழ்ச்சி நிலைக்கு  செல்வதற்கு கல்வி சமூகமே காரணமாகும்.

தொடர்ந்து ஒரு பாடசாலையில் 3 ஆசிரியர் இணைப்பில் சென்றால் பாடசாலையை இயக்குவது எப்படி?

மடு கல்வி பணிப்பாளரான திருமதி.அ.கி.வொலன்ட்ரைன் இன் எதேச்சையான செயற்பாட்டால் இன்று கல்வி கேள்விக்குறி ஆன நிலையில் கள்ளியடி பாடசாலை.....  






மடு கல்வி வலையத்திற்கு உட்பட்ட கள்ளியடி பாடசாலையின் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் மடு கல்வி பணிப்பாளர் திருமதி.அ.கி.வொலன்ட்ரைன் Reviewed by NEWMANNAR on February 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.