அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்3 பொறியியலாளர், 3 மருத்துவர்கள் ,1 சட்டத்தரணி என உயர்தர பெறுபேற்றில் சாதித்த மன்/ சித்திவிநாயகர் இந்து கல்லூரி

 5 வருடங்களாக உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்ற போதிலும் சவால்களைக் கடந்து சாதித்து காட்டியுள்ளனர் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி மணவர்கள்.


 வெளியாகியுள்ள உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் கல்வி பயின்ற மூன்று மாணவர்கள் 3 A  சித்தி பெற்றுள்ளதாகவும், இரண்டு மாணவர்கள் 2A மற்றும் B சித்திகளையும் பெற்று பாடசாலைக்கும் மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் பிரதி அதிபர் சுரேன் தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


 அவர் மேலும் தெரிவிக்கையில் ,,


மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் எமது பாடசாலை மற்றும் வளங்களை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி இந்த பெறுபேறுகளை பெற்று தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


குறிப்பாக ரெக்ஸ் அருள்நேசன் ஷதுர்ஷா கலைப்பிரிவில் 3 A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலையும், உயிரியல் பிரிவில்  ரவீந்திரன் சர்மிலன் 3 A சித்தி பெற்று 5 நிலையையும், சிவசம்பு வர்மினா,சிவசம்பு வர்மிஜன் முறையே 9 ஆம் 10 ஆம் நிலையையும் பெற்றுள்ளதாகவும், கணித பிரிவிலே அமலதாஸ் அலிஸ்ற் பிரட்லி குரூஸ் A 2 B சித்தியை பெற்று 7 ஆம் நிலையை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் இம்முறை மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மூன்று மருத்துவர்கள்,மூன்று பொறியியலாளர்கள்  ஒரு சட்டத்தரணிகளை இந்த வருடம் உருவாக்கியுள்ளது என்பதில் பாடசாலை சமூகம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.


மேலும் இந்த பெறுபேறுகளை பொருத்தவரையில் கடந்த ஐந்து வருடங்கள் நிரந்தரமான ஒரு இணைந்த கணித ஆசிரியர் பெளதீகவியல் ஆசிரியர் இன்றி இந்த பெறுபேறுகளை பெற்ற தொண்பது மிகவும் அசாதாரண ஒன்றாக கருத வேண்டும்.


எமது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வலய கல்வி பணிமனையின் அர்ப்பணிப்பான சேவையினால் இந்த பெறுபேறுகள்  சாத்தியமாகியுள்ளது.

குறிப்பாக பௌதீக விஞ்ஞான பிரிவில் 50 வீதமான மாணவர்களும் உயிரியல் பிரிவில் 50 வீதமான மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் கலை பிரிவில் 92.7 வீதமான மாணவர்களும் , உயிர் முறைமை பிரிவில் 100 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த பாடசாலையினுடைய ஆசிரியர் வளங்கள் குறிப்பாக உயர்தரத்திற்கு உள்ள ஆசிரியர் பற்றாகுறைகள் நிவர்த்தி செய்யும் பட்சத்தில் இன்னும் எங்களுடைய பாடசாலையால் நிறைந்த பெறுபேறுகளைப் பெற்று கொள்ள முடியும் என்பதில் ஐயம் இல்லை என தெரிவித்துள்ளார்

மன்னாரில்3 பொறியியலாளர், 3 மருத்துவர்கள் ,1 சட்டத்தரணி என உயர்தர பெறுபேற்றில் சாதித்த மன்/ சித்திவிநாயகர் இந்து கல்லூரி Reviewed by Author on June 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.