மன்னாரில் முதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு!
முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் தேசிய செயலக நிதி அனுசரணையில் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலை பெருமாள் கட்டு கிராம சேவகர் பிரிவில் இன்று(7) வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு .க அரவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபர், முன்னாள் அரசாங்க அதிபர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட பொறியியலாளர் உட்பட அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் வரவேற்பு நடனம், முதியோர்களின் ஆடல், பாடல், இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் அருட்தந்தை, முன்னாள் மாவட்ட செயலாளர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல், மாவட்டச் செயலக பொறியாளர், கிராம அலுவலர், மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், முதியோர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment