இலங்கைத்தீவில் மழை வீழ்ச்சி குறைந்த இரண்டு மாவட்டங்களில் ஒன்று மன்னார். ஆனாலும் அங்கே ஒரு தீராத அதிசயமாய் கட்டுக்கரைக் குளம் இருக்கிறது. பெரிய நீண்ட கட்டுக் கொண்ட குளம். இந்தக் குளத்திலிருந்து பாய்கிற தண்ணீரில் மன்னாரின் சில பகுதிகள் ஆச்சரியமாய் செழித்திருக்கின்றன., வடபகுதியிலேயே அதிக வீதமான நெல் விளைச்சல் உடைய பிரதேசம் மன்னாரிலுள்ள முருங்கன், உயிலங்குளம் பகுதிகள்தான். அங்கே ஏக்கருக்கு நாற்பது மூடைக்கு மேலாக நெல் அடிக்கும்.
No comments:
Post a Comment