அகில இலங்கை கம்பன் கழகத்தின் நிதி உதவியுடன் மாந்தை மேற்கில் பாதிக்கப்பட்ட நூறு குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.
அகில இலங்கை கம்பன் கழகத்தின் நிதி உதவியுடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) மாந்தை மேற்கில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்துள்ளார்.
cxzzaa
மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பிரேம் குமார் தலைமையில் இடம்பெற்றது.
புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அடம்பன் வடக்கு,வாமதேவ புரம், புளியங்குளம் மற்றும் வேப்பங்குளம் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவு பொதிகள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் உதவியுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பிரேம் குமார் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
December 15, 2025
Rating:


No comments:
Post a Comment