மன்னாரில் காணாமல் போய் இருந்த தாயும், சேயும் பத்திரமாக மீண்டனர்!
மன்னார் மாவட்டத்தின் எழுத்துப்பூர் பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய இளம் விதவைத் தாயான எஸ்.நித்தியலோஜினி என்பவரும், 05 வயதுடைய மகனும் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் மர்மமான முறையில் காணாமல் போய் இருந்த நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்கள்.
வீட்டில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் புறப்பட்டு சென்றிருந்த இருவரும் காணாமல் போய் விட்டனர் என்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடும் செய்திருந்தனர்.
இந்நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கும் இருவரும் நடந்த சம்பவத்தை தெரிவித்தார்கள்.
அவர்கள் தெரிவித்தவை வருமாறு:-
மர்மநபர்கள் சிலர் எம்மை வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றனர். சிறிய வீடு ஒன்றில் இருந்த அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்தனர். வேறு இரு பெண்களும் அவ்வறையில் இருந்தார்கள். கடத்திச் சென்றவர்கள் எம்மோடு மரியாதையாக நடந்து கொண்டனர்.
எமது வீட்டுத் தலைவர் சுரேந்திரன் இறுதி யுத்தத்தில் சிக்கி கடந்த வருடம் மே-06 ஆம் திகதி இறந்து விட்டார். அதற்கான மரண அத்தாட்சிப் பத்திரம் எம்மிடம் உண்டு. அவரின் மரணம் குறித்து எம்மிடம் துருவித் துருவி விசாரித்தனர்.
மீண்டும் எம்மை ஏற்றிச் சென்றவர்கள் சனிக்கிழமை நள்ளிரவு வவுனியாவில் குறுமன் காட்டுப் பகுதியில் உள்ள காளி கோவில் ஒன்றின் முன்னால் இறக்கி விட்டுச் சென்றனர். எமக்கு வவுனியாவிலும்உறவுவினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் வீட்டில் தங்கி இருந்து விட்டு திரும்பி வந்துள்ளோம்.
Reviewed by NEWMANNAR
on
September 16, 2009
Rating:

No comments:
Post a Comment