மதவாச்சி - தலைமன்னார் ரயில்பாதை நிர்மாணப்பணிகள் ஆரம்பம்
மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணியின் ஆரம்ப வைபவம் (27-11-2010) அன்று மதவாச்சியில் இடம்பெற்றதுஇந்திய அரசின் 120 மில். அமெரிக்க டொலர் செலவில் இப்பாதை நிர்மாணிக்கப் படவுள்ளது.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில் வாணிப அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெறும் இன்றைய நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மற்றும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
20 வருடங்களின் பின்னர் மதவாச்சி தலைமன்னார் ரயில் பாதை செப்பனிடப் பட்டு, ரயில் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படுவது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக திகழுமென தெரிவித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன், இதன் மூலம் வடபகுதி மக்கள் அதிக நன்மையடைவர் எனவும் தெரிவித்தார்.
இலங்கை- இந்திய கப்பல் சேவையை துரிதகெதியில் ஆரம்பிப்பதற்கான பணிகள் இடம்பெறும் இவ்வேளையில் இவ் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்படுவது வட பகுதி மக்களுக்கு கிட்டிய பெரும் வரப்பிரசாதம் என்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்-
தொடர்புபட்ட செய்தி-
தொடர்புபட்ட செய்தி-
மதவாச்சி - தலைமன்னார் தொடருந்துப் பாதை புனரமைப்பு இந்திய நிறுவனத்திடம்
மதவாச்சி - தலைமன்னார் ரயில்பாதை நிர்மாணப்பணிகள் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
October 07, 2009
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 07, 2009
Rating:

No comments:
Post a Comment