
மன்னாரில் நேற்று புதன் கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தமையினால் மன்னாரின் பல கிராமங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதோடு மக்கள் இன்று இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். சாந்திபுரம், எமிழ்நகர், நூறுவீட்டுத்திட்டம், எழுத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மன்னார் நகரப்பகுதியில் உள்ள பல வீடுகளும் மழை நீரில் முழ்கியுள்ளது. இந்நிலையில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையும் மழை நீரில் மூழ்கியுள்ளது. பாடசாலையினைச் சூழ மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர். இவ்வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை எவ்வித அமைப்புக்களும் வந்து பார்க்கவில்லை என வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உருப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டார். மழை நீர் கடலுக்குச்செல்ல முடியாத நிலையிலேயே கிராமங்களிளும், மக்களின் குடியிருப்புப்பகுதிகளிலும் தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments:
Post a Comment