நாற்காலிச் சண்டை
நாற்காலிச் சண்டை
================== - மன்னார் அமுதன்
ஆண்டாண்டாய்
ஒலித்து ஓயும்
இசையில் தொடர்கிறது...
ஆணவக் கூட்டணிகளின்
அதிகாரத்தைப்
புதுப்பித்துக் கொள்ளும்
ஆசன விளையாட்டு
அடிக்கடி ஆடப்படுவதால்
ஆண்டியாகிப் போனது
ஆண்டுப் பொருளாதாரம்
அமர்ந்தவர் வெல்ல
தோற்றவர் கொல்ல
சமநிலை மாறிக்
கதிரைகள் சாய
பூனை பங்கிட்ட
அப்ப மாகிறது
அதிகாரப் பரவலாக்கம்
நாற்காலிச் சண்டையில்
விடுவிக்கப்பட்ட
வறுமையின் குரல் மட்டும்
தெருவெங்கும்
ஒலித்து ஓயும்
இசையாய்த் தொடர்கிறது
நாற்காலிச் சண்டை
Reviewed by NEWMANNAR
on
November 04, 2009
Rating:
No comments:
Post a Comment