அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இந்தியக்கலம் தனது ஆய்வைத் தொடங்கியது

மன்னார் நிலப்படுக்கையிலுள்ள எண்ணெய் வளங்களை அகழ்ந்தெடுக்கும் உரிமை இந்தியாவின் கைர்ன் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. மன்னார் நிலப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் குறித்த ஆய்வை இந்நிறுவனத்தின் பிரிவு புளாக் 2007-01-01 மீது ஆரம்பித்துள்ளது. இவர்கள் 2010இன் முதற்காலாண்டு பகுதியில் SR/V Viking II கலத்தைப் பயன்படுத்தி தமது இந்த முயற்சியை முடிக்க எண்ணியுள்ளனர். இந்த ஆய்வுக்கு உள்ளாகியுள்ள கடற்பரப்பு 3000 சதுர கிலோமீற்றர்களாகும். கொழும்பிலிருந்தூ வட மேற்காக 400-1900 மீற்றர் கடலில் அமைந்துள்ளது.இந்த கடற்படுக்கையில் துளையிட்டு எண்ணெய் வளத்தை அடையும்பணி 2011 இன் முதல் அரையாண்டில் ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தமாக 3 எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்படவுள்ளதாகக் குறப்பட்டுள்ளதோடு 2011 ஏப்பிரலில் தோண்டப்படவுள்ள இதற்கான பிற நடவடிக்கைகளில் இப்போதே கைர்ன் நிறுவனம் தொடங்கிவிட்டது.
நன்றி -அதிர்வு
மன்னாரில் இந்தியக்கலம் தனது ஆய்வைத் தொடங்கியது Reviewed by NEWMANNAR on December 11, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.