மன்னாரில் காலவதியான மென் குளிர்பாணம் மற்றும் உணவுப்பண்டங்களை வைத்து விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் மீது இன்று சட்ட நடவடிக்கை
மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமன்னார் தொடக்கம் முருங்கன் வரையிலான பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவங்களுக்கு திடிரென சென்று உணவுப்பொருட்களை பரிசிலினை செய்த போது காலவதியான மென் குளிர்பாணம் மற்றும் உணவுப்பண்டங்களை வைத்து விற்பனை செய்து வந்த 3 வர்த்தக நிலையங்கள் மீது இன்று சட்ட நடவடிக்கையினை எடுத்துள்ளனர்.காலவதியான மென்குளிர்பாணம் மற்றும் உணவுப்பொருட்களை விற்பனை செய்தவந்த 3 வாத்தக நிலையங்களின் உரிமையாளர்களை மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கெ.ஜெவரானி முன்னிலையில் ஆஐர் படுத்தப்பட்டதோடு மீட்கப்பட்ட பொருட்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதன்போது விசாரனைகளை மேற்கொண்ட நீதிபதி வர்த்தக நிலையங்களில் மீட்கப்பட்ட காலவதியான பொருட்களுக்கமைவாக ஒவ்வெருவருக்கும் தலா 8000.ருபாய்,10.000ருபாய்,12.000ருபாய் என அபராதம் விதிக்கப்பட்டதோடு காலவதியான பொருட்களை அழித்துவிடுமாறும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமத கெ.ஜெவரானி இன்று உத்தரவிட்டார்
மன்னார் நிருபர்
மன்னாரில் காலவதியான மென் குளிர்பாணம் மற்றும் உணவுப்பண்டங்களை வைத்து விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் மீது இன்று சட்ட நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
February 02, 2010
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 02, 2010
Rating:

No comments:
Post a Comment